Asianet News TamilAsianet News Tamil

கச்சநத்தம் 3 பேர் கொலை வழக்கு.. 27 பேர் குற்றவாளிகள்.. தண்டனை விவரம் வெளியானது..!

கடந்த 2018ல் ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகர் ஆகிய 3 பேர் நள்ளிரவில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 27 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி முத்துக்குமாரன் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளார். 

Kachanantham murder case- 27 people sentenced to life imprisonment
Author
Sivaganga, First Published Aug 5, 2022, 12:18 PM IST

கடந்த 2018ல் ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகர் ஆகிய 3 பேர் நள்ளிரவில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 27 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி முத்துக்குமாரன் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளார். 

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகேயுள்ள கச்சநத்தம் கிராமத்தில் கடந்த 2018-ம் ஆண்டு கோயில் திருவிழா நடந்துகொண்டிருந்த சமயத்தில் ஊருக்குள் புகுந்த கும்பல், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகளைச் சேதப்படுத்தி, அவர்கள் மீது அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியதில் ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகர் ஆகிய மூவர் கொலை செய்யப்பட்டனர்.

Kachanantham murder case- 27 people sentenced to life imprisonment

பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய இந்தப் படுகொலைச் சம்பவத்துக்கு நியாயம் கேட்டு பல்வேறு அமைப்புகள் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தின. இந்த வழக்கில் சுமன், அருண்குமார், சந்திரக்குமார், அக்னிராஜ், ராஜேஷ் உள்ளிட்ட 33 பேர் மீது வழக்கு பதிவுசெய்து கைது செய்யப்பட்டனர். நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருந்த காலத்தில் குற்றம்சாட்டப்பட்ட இருவர் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை நிறைவு பெற்றதை அடுத்து நீதிபதி முத்துக்குமரன் இவ்வழக்கில் 27 பேர் குற்றாவாளிகள் என அறிவித்தார். குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் நாளை 5ம் தேதிக்கு வழங்கப்படுவதாக அறிவித்து தீர்ப்பை ஒத்திவைத்தார்.

Kachanantham murder case- 27 people sentenced to life imprisonment

இந்நிலையில், தண்டனை விவரம் வெளியாகியுள்ளது, இந்த வழக்கில் 27 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios