நாகர்கோவிலில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் தொழில் செய்து வந்தவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

குமரி மாவட்டத்தில் குட்கா, புகையிலை விற்பனை, கஞ்சா விற்பனையை தடுக்கும் விதத்தில் போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில், நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் செல்லும் சாலையில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கிருந்த வாலிபரிடம் விசாரணை நடத்தியபோது அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தார். போலீசார் அங்கு இருந்த அறைகளில் சோதனை நடத்தினார்கள். அப்போது அறைகளில் 2 அழகிகள் இருந்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்கள் ஈரோடு, சென்னை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. கடந்த 4 நாட்களுக்கு முன்புதான் நாகர்கோவிலுக்கு வந்ததாக கூறி கண்ணீர்மல்க தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை பிடித்தனர்.

பிடிபட்ட வாலிபர் சேலம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்த தினேஷ் (24) என்பதும், இவர் புரோக்கராக செயல்பட்டதும் தெரியவந்தது. இவரை செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு வாலிபர்கள் பலரும் இங்கு வந்து பெண்களுடன் உல்லாசமாக இருந்தது தெரியவந்துள்ளது. வாலிபர்களிடம் 1000 முதல் ஆயிரத்து 500 ரூபாய் பணம் வசூல் செய்துள்ளனர்.

குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான வாலிபர்கள் கடந்த சில நாட்களாக இங்கு வந்து சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, தினேசை போலீசார் கைது செய்தனர். மீட்கப்பட்ட 2 பெண்களையும் காப்பகத்தில் ஒப்படைத்தனர். தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை தேி வருகின்றனர்.