அண்ணி என்று கூட பாராமல் நடுரோட்டில் கொழுந்தன் செய்த வெறிச்செயல்..!

அருவாமனையால் பெண்ணை வெட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து ஆவினங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Property issue... Relatives who cut the Women in Tittakudi

திட்டக்குடி அருகே சொத்து பிரச்னை காரணமாக பெண்ணை ஓட ஓட விரட்டி அருவாமனையால் வெட்டிய உறவினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள நாவலூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மனைவி காவேரி(33). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் இவரது கணவர் ஓராண்டுக்கு முன் உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து, காவேரி அதே கிராமத்தில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். 

இதையும் படிங்க;- 31 வயது ஆன்ட்டி குளிப்பதை அங்குலம் அங்குலமாக வீடியோ எடுத்த 21 வயது இளைஞர்.. அப்புறம் என்ன நடந்தது தெரியுமா?

இந்நிலையில், காவேரிக்கும், கணவரின் சகோதரர் சுப்ரமணியன், சகோதரி செல்வி ஆகியோர் இடையே சொத்துப் பிரச்னை இருந்தது. காவேரியை வீட்டை விட்டு துரத்திவிட்டு, சுப்ரமணியன், செல்வி குடும்பத்தினர் மட்டும் வசித்து வந்தனர். இதுகுறித்து, காவேரி கடலுார் எஸ்.பி. அலுவலகத்தில் அளித்த புகாரின் பேரில், ஆவினங்குடி போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து சமாதானம் செய்து அனுப்பினர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. 

இதையும் படிங்க;-  கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த தந்தை.. நேரில் பார்த்த மகன்.. வெறியில் என்ன செய்தார் தெரியுமா?
 
இந்நிலையில், இருதரப்பினரிடையே மீண்டும் சொத்து தொடர்பாக வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது வாய் தகராறு கைகலப்பாக மாறியது. இதில், ஆத்திரமடைந்த செல்வியின் கணவர் திருமுருகன் (46) வீட்டின் அருகில் இருந்த அருவாமனையை எடுத்து வந்து காவேரியை வெட்டினார். அவர் தப்பிக்கும்போது ஓட, ஓட விரட்டி சரமாரியாக வெட்டினார். இதில், படுகாயம் அடைந்த காவேரியை அருகில் இருந்தவர்கள் மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அருவாமனையால் பெண்ணை வெட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து ஆவினங்குடி போலீசார் பெண்ணை தாக்கிய உறவினர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க;- கருமுட்டை விற்க சொல்லி இளம்பெண்ணுக்கு டார்ச்சர்! வசமாக சிக்கிய தம்பதி.. சென்னையில் நடந்த பயங்கரம்.!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios