கருமுட்டை விற்க சொல்லி இளம்பெண்ணுக்கு டார்ச்சர்! வசமாக சிக்கிய தம்பதி.. சென்னையில் நடந்த பயங்கரம்.!

கருமுட்டையை விற்ககோரி இளம்பெண்ணை அடித்து துன்புறுத்திய கணவன் - மனைவியை போலீசார் கைது செய்துதுள்ள சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Chennai oocyte Sales issue...couple arrested

கருமுட்டையை விற்ககோரி இளம்பெண்ணை அடித்து துன்புறுத்திய கணவன் - மனைவியை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை அருகில் உள்ள எர்ணாவூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் விஜய். பிரபல ரவுடி. இவரது மனைவி ஸ்ருதி(22). பி.ஏ. பட்டதாரி பெண்ணுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இவர்களுக்கு  2 வயதில் ஒரு மகன் இருக்கிறான். இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து. அந்த பெண் கணவரை விட்டு பிரிந்து வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அந்த பெண்ணுக்கு திருவெற்றியூர் என்.டி.குப்பத்திலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் அவரின் தோழி ஐஸ்வர்யா என்பவரின் வீட்டில் தங்கியுள்ளார். முதலில் ஸ்ருதியிடம் அவரின் தோழி ஐஸ்வர்யா, அவரின் கணவன் சூரஜ் ஆகிய இருவரும் நன்றாகக் கவனித்து அன்பாகப் பழகி வந்திருக்கிறார்கள். நாளடைவில் இவர்கள் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 

இதையும் படிங்க;- ஒரு பேராசிரியைக்கு இவ்வளவு ஒரு காமவெறியா? கள்ளக்காதலை துண்டித்த காதலன்.. 40 இடங்களில் கத்தியால் குத்தி கொலை

Chennai oocyte Sales issue...couple arrested

 அவர்கள் இருவரும், இந்த இளம்பெண்ணின் கருமுட்டையை விற்கலாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள். கருமுட்டையை விற்றால் 20,000 ரூபாய் வரை கிடைக்கும் என சுருதியிடம் ஆசைவார்த்தை கூறி மூளை சலவை செய்தனர். பெண் புரோக்கர் மூலம் தாம்பரத்தில் உள்ள மருத்துவமனையில் கருமுட்டையை விற்க முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, தாம்பரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சில நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணை அழைத்து சென்றனர். அங்கு அந்த பெண்ணிடம் கருமுட்டைக்கு 40,000 ரூபாய் வழங்கப்படுவதாக மருத்துவமனை ஊழியர்கள் தெரித்துள்ளனர். 

Chennai oocyte Sales issue...couple arrested

தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சுருதி பயந்து போய் கருமுட்டை வழங்காமல் ஐஸ்வர்யா வீட்டுக்கு திரும்பி வந்துவிட்டார். மேலும், அந்த பெண் ஐஸ்வர்யாவிடம் தன்னை எப்படி ஏமாற்றலாம்  என பிரச்சனை செய்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சூரஜ், ஐஸ்வர்யா ஸ்ருதியைச் சரமாரியாக தாக்கி வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்து வந்துள்ளனர். ஒருவழியாக அவர்களிடமிருந்து தப்பிய சுருதி திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, தம்பதியை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தாம்பரம் தனியார் மருத்துவமனைக்கும் சென்று விசாரிக்கவுள்ளனர். அதோடு, கருமுட்டையை விற்க உதவி செய்த புரோக்கரையும் காவல்துறையினர் தேடிவருகிறார்கள்.

இதையும் படிங்க;-  லாட்ஜில் ரூம் போட்டு படுக்கை அறையில் பெண் நிர்வாகியுடன் பாஜக தலைவர் உல்லாசம்? வீடியோ வைரல்..!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios