முன்னாடியெல்லாம் ‘பொள்ளாச்சி’ எனும் பெயரை கேட்டால் இளநீர் நினைவுக்கு வரும், ஆறு வயல் மனசுல அலை பாயும். ஆனா இப்பல்லாம் இந்த பெயரைக் கேட்டாலே காதுக்குள்ளே ’அண்ணா அடிக்காதீங்ணா! விட்டுடுங்ணா!’ எனும் அழுகைக்குரல் பாய்ந்து, உடம்பின் சர்வ நரம்பையும் சங்கடத்தில் நெளிய வைக்கிறது. 

இது ஒரு புறமிருக்க, இந்த வழக்கின் போக்கில் போலீஸும், பொலிடீசியன்களும் அநியாயத்துக்கு விமர்சனத்துக்கு ஆளாகி அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் இப்போது செம்ம பஞ்சாயத்து ஒன்று புதிதாக வெடித்துக் கிளம்பியிருக்கிறது. 

அது இதுதான்.... “செக்ஸ் சைக்கோ கிரிமினல்களான திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன் மற்றும் வசந்த் குமார் இவர்களின் பிடியில் சிக்கி சின்னாபின்னமான பொண்ணுங்க, பெண்கள் எக்கச்சக்கம். அதுல சென்னையை சேர்ந்த டாக்டர் ஒருவரின் மனைவியும் இருக்கிறார். இந்த லேடியை எசகுபிசகா வீடியோ, போட்டோ எடுத்த இந்த டீம், அதை வெளியிடாமல் இருக்கணும்னா பணம் கொடுன்னு சொல்லி சுமார் ஒண்ணேகால் அல்லது ஒன்றரை கோடி ரூபாயை சமீபத்துல கறந்திருக்கானுங்க. 

இந்தப் பணம் கைக்கு வந்த சில நாட்கள்ள இந்த டீம் அப்படியே போலீஸ்ல சிக்கிட்டானுங்க. இந்த நிலையில அந்த கோடி ரூபாயில சுமார் அறுபது லட்சத்தை, ஒரு சிலர் அடங்கிய டீம் ஒன்று இவனுங்க நண்பரிடம் இருந்து பிடுங்கியிருக்குது. எந்த வகையிலும் அந்தப் பணத்தை சொந்தம் கொண்டாடவோ, புகார் கொடுக்கவோ அந்தப் பசங்களால் முடியாதென்பதால், பிடுங்கிய டீம் ரொம்ப சந்தோஷமாகவும், கெத்தாகவும் இருக்குது. 

நடந்த சம்பவம் உறுதி, ஆனால் அதை செய்தது இந்த கேஸை விசாரணை செய்ய துவங்கிய போலீஸில் சிலரா? அல்லது கைதான டீம் இவ்வளவு பெரிய பணத்தை ஒரு நபரிடம்  பதுக்கி வெச்சிருக்குதுன்னு தெரிஞ்சு, அந்த நபரை அடித்து இந்த பணப்பறிப்பை நடத்தியது சில கரைவேஷ்டி அரசியல்வாதிகளா?  அதுதான் சரியா புரியலை. சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரிகள் இதையும் விசாரிக்கணும். பாவப்பட்ட பணத்திலும் பங்கு போட்டவங்கள ச்சும்மா விடலாமா?” என்கிறார்கள். பிடிச்சு உள்ள போடுங்க சார் இந்த வழிப்பறி வியாதிக்காரனுங்கள!