உடற்கல்வி ஆசிரியர் தலை துண்டித்து கொடூர கொலை.. என்ன காரணம் தெரியுமா? வெளியான தகவல்..!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்துள்ள திருவக்குளம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் என்கின்ற அருண்பாண்டியன் (28). இவர் தனியார் பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது.

Physical Education Teacher murder in chidambaram tvk

தனியார் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்துள்ள திருவக்குளம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் என்கின்ற அருண்பாண்டியன் (28). இவர் தனியார் பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது.

இதையும் படிங்க;- அழகுக்கு ஏத்த மாதிரி ரேட்டு! மசாஜ் சென்டர் மஜாவாக நடந்த விபச்சாரம்.. உள்ளே புகுந்த போலீஸ்..!

இந்நிலையில், அருண்பாண்டியன் சிதம்பரம் அண்ணாமலை நகர் பகுதியில் நேற்று இரவு கொடூரமாக தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அருண்பாண்டியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதையும் படிங்க;-  அதிமுக பிரமுகரின் மகன் சல்லி சல்லியாய் வெட்டி படுகொலை.. கதறிய தந்தை.. நடந்தது என்ன?

இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையில் நடத்தியதில் மதுபோதையில் சீட்டு விளையாடிக்கொண்டிருந்த போது நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் அருண்பாண்டியன் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios