ஒரு தலைக்காததால் இளம்பெண்கள் மீது ஆசிட் வீசுவது, பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொல்வது, கத்தியால் குத்தி கொலை செய்யும் சம்பவங்கள் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால், பெண்களை பெற்ற பெற்றோர் தனது மகள் கல்லூரி, வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் வரை வயிற்றில் நெருப்பை கட்டியவாறு இருந்து வருகின்றனர்.

பெங்களூரு அருகே காதலிக்க மறுத்த இளம்பெண்ணை கொடூரமாக கத்தியால் குத்தி படுகொலை செய்த இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஒரு தலைக்காததால் இளம்பெண்கள் மீது ஆசிட் வீசுவது, பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொல்வது, கத்தியால் குத்தி கொலை செய்யும் சம்பவங்கள் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால், பெண்களை பெற்ற பெற்றோர் தனது மகள் கல்லூரி, வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் வரை வயிற்றில் நெருப்பை கட்டியவாறு இருந்து வருகின்றனர்.

இதையும் படிங்க;- கணவரை பிரிந்த மகள்.. வேறு சாதி இளைஞருடன் கள்ளக்காதல்.. துடிதுடிக்க ஆணவக்கொலை செய்த பெற்றோர்.!

இந்நிலையில், கர்நாடக மாநிலம் கன்னடா மாவட்டத்தை சேர்ந்தவர் உஷா(25). பெங்களூரு புறநகர் மாவட்டம் ஒசக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அதே நிறுவனத்தில் தமிழகத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணா(30) என்பவரும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்தநிலையில் உஷாவும், கோபாலகிருஷ்ணாவும் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்ததால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

அப்போது உஷாவை, கோபாலகிருஷ்ணா ஒரு தலையாக காதலிக்க தொடங்கினார். ஒரு கட்டத்தில் உஷாவிடம், கோபாலகிருஷ்ணா தனது காதலை தெரிவித்துள்ளார். ஆனால், உஷா வேறு ஒருவரை காதலித்து வருவதாகவும் கூறியுள்ளார். இனிமேல் காதலிப்பதாக கூறி தொந்தரவு செய்ய வேண்டாம் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க;- திருமணத்திற்கு முன்னே 2 பேருடன் தொடர்பு.. கணவனை போட்டு தள்ளிவிட்டு நாடகமாடிய காமவெறி பிடித்த மனைவி..!

இந்நிலையில் நேற்று காலையில் உஷாவை, கோபாலகிருஷ்ணா சந்தித்து தன்னை காதலிக்கும்படி மீண்டும் வற்புறுத்தியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த உஷா கோபாலகிருஷ்ணாவை கடுமையாக திட்டினார். தன் காதலை ஏற்காததால் கடும் கோபமடைந்த கோபாலகிருஷ்ணா எனக்கு கிடைக்காத நீ யாரும் கிடைக்க கூடாது என கூறிவிட்டு தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து உஷாவை பல்வேறு பகுதிகளில் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த உஷா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். 

இதையும் படிங்க;-எவ்வளவு சொல்லியும் கேட்காமல் மனைவியுடன் ஒரு மணிநேரம் உல்லாசம்.. ஆத்திரத்தில் கள்ளக்காதலனை வெட்டி கொன்ற கணவர்.!

இதையடுத்து கோபால கிருஷ்ணா தனது இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளார். இந்த கொலை தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உஷா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கோபாலகிருஷ்ணனை தீவிரமாக தேடிவந்தனர். காதலிக்க மறுத்த பெண்ணை கொலை செய்துவிட்டு கோபாலகிருஷ்ணா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.இதனையடுத்து, அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் ஒரு தலைக்காதலால் இளம்பெண் கொலை செய்துவிட்டு இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க;- உல்லாசத்தின் போது ஏற்பட்ட தகராறு... நிர்வாண நிலையில் அண்ணியை கொடூரமாக குத்திக்கொன்ற கள்ளக்காதலன்.!