திருமணமான ஒன்னரை மாதத்தில் மனைவி 4 மாத கர்ப்பம்... என்னை ஏமாத்திட்டாங்க.. போலீசில் கணவர் கதறல்.!
கடந்த ஒன்னரை மாதங்களுக்கு முன்னர் 2 பேருக்கும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், இளம்பெண் கடந்த சில நாட்களாகவே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
திருமணமான ஒன்னரை மாதங்களிலேயே மனைவி 4 மாதம் கர்ப்பமாக இருப்பதை கேட்டு கணவர் அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து மனைவி வீட்டார் தங்களை ஏமாற்றிவிட்டதாக கணவர் வீட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
உத்தர பிரதேசம் மாநிலம் மகாராஜ்காஞ்ச் மாவட்டம் கோல்ஹூய் பகுதியை சேர்ந்த இளைஞருக்கும், இளம்பெண் ஒருவருக்கும் சமீபத்தில் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, கடந்த ஒன்னரை மாதங்களுக்கு முன்னர் 2 பேருக்கும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், இளம்பெண் கடந்த சில நாட்களாகவே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இதையும் படிங்க;- ஒரே வீட்டில் தங்கி உல்லாசமாக இருந்த கள்ளக்காதல் ஜோடி.. நள்ளிரவில் வந்த கணவர்..அப்புறம் நடந்ததை மட்டும் பாருங்க
இதையடுத்து மருமகளை மாமியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது, மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் உங்கள் மருமகள் 4 மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறியதை கண்டு மாமியார் அதிர்ச்சியடைந்தார். திருமணம் முடிந்து வெறும் ஒன்றரை மாதமே ஆன நிலையில் எப்படி 4 மாத கர்ப்பிணியானாய் என அந்த கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கேள்வி எழுப்பினர்.
இதற்கு அவர் பதில் அளிக்கவில்லை. இதனையடுத்து, கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் இளம்பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
இதையும் படிங்க;- உடலுறவின்போது அந்த நரம்பு உடைந்து போச்சு.. என்னால் குழந்தை பெத்துக்க முடியாது.. இளம் புதுமண தம்பதி தற்கொலை.!