உடலுறவின்போது அந்த நரம்பு உடைந்து போச்சு.. என்னால் குழந்தை பெத்துக்க முடியாது.. இளம் புதுமண தம்பதி தற்கொலை.!

எனது ஆண்குறியின் நரம்பு உடைந்து போனதால் என்னால் குழந்தை பெற இயலாத காரணத்தால் நாங்களே எங்கள் சாவை செய்கிறோம் இதில் யாருக்கும் எந்த சம்மதம் இல்லை என எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

New marriage couple suicide in chennai...shocking reason

சென்னையில் திருமணமான 6 மாதத்தில் கணவன், மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலியை சேர்ந்தவர் சக்திவேல்(22). இவர் சென்னை மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம், தனலட்சுமி நகர் பகுதியில் தங்கி காயலான் கடை நடத்தி வந்தார். இவருக்கு கடந்த ஜனவரி மாதம் ஆர்த்தி (20) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த நிலையில் இருவரும் மதுரவாயலில் வசித்து வந்தனர்.

New marriage couple suicide in chennai...shocking reason

புதுமணத் தம்பதி என்பதால் இருவர் வீட்டிலிருந்தும் நலம் விசாரிப்பதற்காகத் தினமும் செல்போன் அழைப்புகள் வருவது வழக்கம். வழக்கம் போல நேற்று காலை அவர்களுக்கு அழைப்பு வந்துள்ளது. நீண்ட நேரம் ஆகியும் இருவரும் செல்போனை எடுக்கவில்லை. அதேபோல், கடையும் திறக்கவில்லை. கதவை தட்டியும் திறக்காததால் உறவினர்கள் மதுரவாயல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து 

உள்ளே சென்று பார்த்த போது கணவன், மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து இருவர் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, போலீசார் அந்த வீட்டைச் சோதனை செய்தபோது தற்கொலைக்கு முன்பாக அவர்கள் எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது.

New marriage couple suicide in chennai...shocking reason

அதில் எனது ஆண்குறியின் நரம்பு உடைந்து போனதால் என்னால் குழந்தை பெற இயலாத காரணத்தால் நாங்களே எங்கள் சாவை செய்கிறோம் இதில் யாருக்கும் எந்த சம்மதம் இல்லை என எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். திருமணத்திற்கு பின்பு மனைவியுடன் உடலுறவு கொண்டபோது சக்திவேலின் ஆண்குறியில் நரம்பு உடைந்து விட்டதாகவும், அதன் பிறகு அவரால் உடலுறவு கொள்ள முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து மருத்துவமனை ஏதும் அணுகாமல் இருந்து வந்ததாகவும் தங்களுக்கு குழந்தை பிறக்காது என முடிவு மிகுந்த மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க;- மனைவி, குழந்தைகளை ரம்பத்தால் கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு IT ஊழியர் தற்கொலை செய்து கொண்டது ஏன்? வெளியான பகீர்

இதையும் படிங்க;- யாரு வீட்டு பொண்ண யாரு கல்யாணம் பண்றது.. தகுதி தராதரம் வேணா.. இளைஞரின் தாயை வெட்டிக்கொலை செய்த பெண்ணின் தந்தை

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios