மனைவி, குழந்தைகளை ரம்பத்தால் கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு IT ஊழியர் தற்கொலை செய்து கொண்டது ஏன்? வெளியான பகீர்
மகள் நித்யஸ்ரீ (13), மகன் ஹரிகிருஷ்ணன். கடந்த வெள்ளிக்கிழமை இரவு பிரகாஷ், மரம் அறுக்கும் இயந்திரமான ரம்பத்தால் தனது மனைவி, மகள், மகன் ஆகியோரை கொடூரமாக ரத்த வெள்ளத்தில் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.
வாங்கிய கடனை திருப்பி கட்ட முடியாததால் சாப்ட்வேர் இன்ஜினியர் மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.
சென்னை பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூர் வெங்கடேஷ்வரா நகரைச் சேர்ந்தவர் பிரகாஷ் (41). சாப்ட்வேர் இன்ஜினீயர். இவரது மனைவி காயத்ரி (39). வீட்டின் அருகே உள்ள வடிவேல் தெருவில் நாட்டு மருந்து கடை நடத்தி வந்தார். இவர்களது மகள் நித்யஸ்ரீ (13), மகன் ஹரிகிருஷ்ணன். கடந்த வெள்ளிக்கிழமை இரவு பிரகாஷ், மரம் அறுக்கும் இயந்திரமான ரம்பத்தால் தனது மனைவி, மகள், மகன் ஆகியோரை கொடூரமாக ரத்த வெள்ளத்தில் கழுத்தை அறுத்து கொலை செய்தார். இதனையடுத்து, அதே இயந்திரத்தால் தனது கழுத்தை அறுத்து கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், கடந்த 19-ம் தேதி ஆன்லைனில் பிரகாஷ் ரம்பத்தை வாங்கி வைத்து இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது. மேலும், கழுத்தை அறுக்கும் முன்பு வலி தெரியாமல் இருப்பதற்காக மயக்க மருந்து கலந்து கொடுத்து இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பிரகாசின் இந்த கொடூர முடிவுக்கு கடன் தொல்லையே முக்கிய காரணம் என்று தெரியவந்துள்ளது.
அவர் வீடு கட்ட ரூ.27 லட்சம் வரை கடன் வாங்கி உள்ளார். மேலும் கார் வாங்கவும், மனைவியின் மருந்து கடையில் நஷ்டம் ஏற்பட்டதால் அதனை நடத்தவும் கடன் வாங்கி இருந்தார். பிரகாஷ் மொத்தம் 9 பேரிடம் ரூ.80 லட்சம் வரை கடன் பெற்று இருந்ததாக தெரிகிறது. இதனை அவர் வார வட்டிக்கு வாங்கி இருந்தார். ஆனால் பணத்தை பிரகாசால் திருப்பி கொடுக்க முடியவில்லை. இதனால் பணம் கொடுத்தவர்கள் கொடுத்த நெருக்கடியால் மன உளைச்சலில் இருந்த பிரகாஷ் குடும்பத்தினை கொலை செய்து விட்டு தற்கொலை முடிவுக்கு சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதையடுத்து பிரகாசுக்கு கடன் கொடுத்தவர்கள் யார்-யார்?, கடைசியாக அவரிடம் யார் பேசினார்? என்பது குறித்து செல்போனை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க;- மும்பை அழகியை வரவழைத்து உல்லாசம்.. காரியம் முடிந்ததும் இளைஞர்கள் செய்த பகீர் சம்பவம்..!
இதையும் படிங்க;- நண்பரின் பிறந்தநாள் விழாவுக்கு சென்ற புதுமாப்பிள்ளை படுகொலை.. திருமணமான 15 நாட்களில் தாலியை இழந்த இளம்பெண்.!