யாரு வீட்டு பொண்ண யாரு கல்யாணம் பண்றது.. தகுதி தராதரம் வேணா.. இளைஞரின் தாயை வெட்டிக்கொலை செய்த பெண்ணின் தந்தை
ஆத்திரம் அடைந்த அவர் தான் கொண்டு சென்ற அரிவாளால் ராக்குவை சரமாரியாக வெட்டினார். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
மகள் காதல் திருமணம் செய்ததால் காதலனின் தாயை ஆத்திரத்தில் வெட்டிக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பெண்ணின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கிழக்கு அபிராமத்தை சேர்ந்தவர் ராக்கு (55). இவரது மகன் வினித்குமார் (25). இவரும், பக்கத்து வீட்டை சேர்ந்த கண்ணாயிரம் மகள் காவ்யாவும் (21) காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெண்ணின் வீட்டார் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால், வேறு வழியில்லாமல் இருவரும் வீட்டை விட்டு இருவரும் வெளியேறினர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த காவ்யாவின் தந்தை கண்ணாயிரம் மகளை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து, காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனிடையே, வீட்டை வீட்டு வெளியேறிய மகள் வினித்குமாருடன் கோவிலில் திருமணம் செய்த செய்தியை அறிந்த பெண்ணின் தந்தை ஆத்திரடைந்தார். இதனையடுத்து, ராக்கு வீட்டுக்கு சென்று கண்ணாயிரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது ஆத்திரம் அடைந்த அவர் தான் கொண்டு சென்ற அரிவாளால் ராக்குவை சரமாரியாக வெட்டினார். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ராக்கு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கமுதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள கண்ணாயிரத்தை தேடி வருகின்றனர்.