ஒரே வீட்டில் தங்கி உல்லாசமாக இருந்த கள்ளக்காதல் ஜோடி.. நள்ளிரவில் வந்த கணவர்..அப்புறம் நடந்ததை மட்டும் பாருங்க

நான் இனி தனது கணவருடன் செல்ல மாட்டேன், இங்கேயே தங்க போகிறேன் எனக்கூறி இரவில் தங்கியுள்ளார். கள்ளக்காதல் ஜோடி இருவரும் இரவில் ஒன்றாக தங்கிய நிலையில், நள்ளிரவு வீட்டின் கதவை மர்மநபர்கள் தட்டியுள்ளனர்.

Husband who assaulted wife who stayed with fake boyfriend

சேலம் அருகே நள்ளிரவில் கள்ளக்காதல் ஜோடி மீது வீடு புகுந்து தாக்குதலில் ஈடுபட்ட கணவர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகேயுள்ள ஆவடத்தூர் எல்லைக்காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி (28). தறித் தொழிலாளி. இவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தனது சின்னமாமனார் படவெட்டி என்பவரை கொலை செய்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், ஜாமீனில் வெளியே வந்த ரங்கசாமி, வீரக்கல் கக்குவான் மாரியம்மன் கோயில் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தனது மனைவி, குழந்தையுடன் வசித்து வந்தார்.

Husband who assaulted wife who stayed with fake boyfriend

அப்போது, பக்கத்து வீட்டில் வசித்து வந்த சுந்தரத்தின் மனைவி சுகுணா (28) என்பவருடன் ரங்கசாமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விவகாரம் நாளடைவில் ரங்கசாமியின் மனைவிக்கு தெரியவந்ததையடுத்து கணவரை விவகாரத்து செய்துவிட்டார். இந்த கள்ளக்காதல் விவகாரத்தை அறிந்த சுகுணாவின் கணவர் சுந்தரம், சகோதரர்கள் அழகேசன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ரங்கசாமியை கண்டித்து, அந்த ஊரை விட்டு விரட்டியுள்ளனர். இதனால், ரங்கசாமி தனது சொந்த ஊரில் வந்துவிட்டார். அப்படி இருந்த போதிலும் கணவருக்கு தெரியாமல்  ரங்கசாமியை சுகுணா பார்த்து சென்றதாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க;-  கள்ளகாதலியுடன் இரவில் உல்லாசம்.. இடையூறாக இருந்த குழந்தைகள்.! கள்ளக்காதலன் செய்த வெறிச்செயல்

இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் ரங்கசாமியின் வீட்டிற்கு சுகுணா வந்துள்ளார். அப்போது நான் இனி தனது கணவருடன் செல்ல மாட்டேன், இங்கேயே தங்க போகிறேன் எனக்கூறி இரவில் தங்கியுள்ளார். கள்ளக்காதல் ஜோடி இருவரும் இரவில் ஒன்றாக தங்கிய நிலையில், நள்ளிரவு வீட்டின் கதவை மர்மநபர்கள் தட்டியுள்ளனர். ரங்கசாமி கதவை திறந்து பார்த்தபோது, சுகுணாவின் கணவர் சுந்தரம், சகோதரர்கள் அழகேசன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இருந்துள்ளனர்.

Husband who assaulted wife who stayed with fake boyfriend

அவர்கள் வீட்டிற்குள் புகுந்து ரங்கசாமி, சுகுணா ஆகிய இருவர் மீதும் கொடூரமாக தாக்கினர். இதில், சுகுணாவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரங்கசாமியும் படுகாயமடைந்து கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்டு அருகே வசிக்கும் நபர்கள் ஓடிவரவும் தாக்குதலில் ஈடுபட்ட 3 பேரும் தப்பியோடினர். இதையடுத்து படுகாயமடைந்த கள்ளக்காதல் ஜோடியை சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை கைது செய்துள்ளனர்.

இதையும் படிங்க;- என் புருஷன் கதையை முடிச்சுட்ட.. சீக்கிரம் வாடா.. இறுதியில் கள்ளக்காதலனும், மனைவியும் என்ன செய்தாங்க தெரியுமா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios