என் புருஷன் கதையை முடிச்சுட்ட.. சீக்கிரம் வாடா.. இறுதியில் கள்ளக்காதலனும், மனைவியும் என்ன செய்தாங்க தெரியுமா?

 வழக்கம்போல் சக்திவேல் போதையில் வீட்டுக்கு வந்த நிலையில் வீட்டில் வைத்து மது அருந்தி உள்ளார். மனைவி புகழரசி ஊற்றிக்கொடுக்க மூக்கு முட்ட மது அருந்திய சக்திவேல் மது மயக்கத்தில் அப்படியே தூங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, மறுநாள் காலையில் பார்க்கும் போது சக்ததிவேல் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.

illegal love... Killing her husband by giving poison.. Wife Arrest

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனுக்கு மது, உணவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த மனைவியை கள்ளக்காதலனுடன் போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகேயுள்ள காரைக்காடு வீரபத்திரன் கொட்டாயை சேர்ந்தவர் சக்திவேல் (37), கூலி தொழிலாளி. இவரது மனைவி புகழரசி. இவர்களுக்கு 8 வயதில் ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில், மனைவி புகழரசி செல்போனில் அடிக்கடி யாருடனோ பேசிக் கொண்டு இருந்துள்ளார். இதனால், மனைவியின் நடத்தையில் கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. குடிபோதையில் வீட்டிற்கு வரும் சக்திவேல் மனைவியை டார்ச்சர் செய்து கொடுமைப்படுத்ததி வந்துள்ளார். 

இந்நிலையில், செவ்வாய்கிழமை வழக்கம்போல் சக்திவேல் போதையில் வீட்டுக்கு வந்த நிலையில் வீட்டில் வைத்து மது அருந்தி உள்ளார். மனைவி புகழரசி ஊற்றிக்கொடுக்க மூக்கு முட்ட மது அருந்திய சக்திவேல் மது மயக்கத்தில் அப்படியே தூங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, மறுநாள் காலையில் பார்க்கும் போது சக்ததிவேல் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். அளவுக்கு அதிகமாக  மது அருந்தியதால் சக்திவேல் உயிரிழந்துவிட்டதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சக்திவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதனிடையே, அண்ணனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது தம்பி முத்துசாமி கொளத்தூர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து புகழரசி போனில் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்த முத்துக்குமார் என்பவரிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது, மனைவி கணவனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டு அதிர்ச்சி வாக்குமூலம் அளித்தார்.  அவர்கள் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் தரப்பில் கூறுகையில்: சக்திவேல் அடிக்கடி மதுஅருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது மனைவியிடம், ‘பலருடன் நீ கள்ளத்தொடர்பு வைத்துள்ளாய்’ என கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் அதேபகுதியை சேர்ந்த முத்துக்குமார் என்பவருடன் புகழரசிக்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இதனையறிந்த சக்திவேல், புகழரசியை கண்டித்துள்ளார். இதனால் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதால் சக்திவேலை கொலை செய்து விடலாம் என முத்துக்குமாரிடம் புகழரசி தெரிவித்துள்ளார்.

இதனிடையே நேற்று முன்தினம் இரவு மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்த சக்திவேல் மீண்டும் புகழரசியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்ட புகழரசி, முதலில் உணவில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்துள்ளார். இதையடுத்து மது மற்றும் தண்ணீரில், விவசாயகலைக்கொல்லியை கலந்து குடிக்க கொடுத்துள்ளார். இதனை அருந்திய சிறிது நேரத்தில் சக்திவேல் வாந்தி எடுத்துள்ளார். பின்னர் அவருக்கு வலிப்பு வந்துள்ளது. இதுகுறித்து முத்துக்குமாரிடம் புகழரசி போன் மூலம் தகவல் தெரிவித்தார். அவர் வந்து பார்த்தபோது சக்திவேல் இறந்து போனது தெரிந்தது. மதுபோதையில் வீட்டுக்கு வந்து படுத்தவர் காலையில் எழுந்திருக்கவில்லை என உறவினர்களிடம் கூறும்படி புகழரசிக்கு ஆலோசனை கூறிவிட்டு முத்துக்குமார் சென்று விட்டார். மேலும் புகழரசிக்கு தான் வாங்கி கொடுத்திருந்த செல்போனையும் வாங்கி கொண்டு சென்று விட்டார். விசாரணையில் புழரசியும் முத்துக்குமாரும் சிக்கி கொண்டனர்.

இதையும் படிங்க;- காதல் திருமணம் செய்த தம்பதி படுகொலை.. மகன் இறந்தது கூட தெரியாத தாய்.. அனாதையாக கிடைக்கும் மோகனின் உடல்.!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios