உடலுறவினால் ஏற்பட்ட சம்பவம்.. எங்களுக்கு குழந்தை பிறக்காது - கணவன் மனைவி எடுத்த விபரீத முடிவு
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்புதான் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், இருவருக்கும் உறவினர்கள் செல்போனில் தொடர்பு கொண்ட போது செல்போனை எடுக்கவில்லை.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் சென்னை, மதுரவாயல் பகுதியில் தங்கி பழைய பாத்திரங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி ஆர்த்தி. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்புதான் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், இருவருக்கும் உறவினர்கள் செல்போனில் தொடர்பு கொண்ட போது செல்போனை எடுக்கவில்லை.
இதனால் உறவினர்கள் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளனர். அப்போது கதவு உள் பக்கமாக பூட்டியிருந்தது. இதையடுத்து அதிக நேரம் கதவைத் தட்டியும் திறக்காததால், உறவினர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மதுரவாயல் போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது கணவன், மனைவி இருவரும் மின்விசிறியில் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் இறந்து கிடந்துள்ளனர்.
இதையும் படிங்க :ஸ்டாலின் ஆட்சி நம்பர் 1.. அப்போ கலைஞர் ஆட்சி நல்லா இல்லையா ? உதயநிதிக்கு சவால் விட்ட அண்ணாமலை
பிறகு இருவரது உடலையும் மீட்ட போலீசார் வீட்டில் சோதனை செய்தபோது தற்கொலை கடிதம் ஒன்றை கண்டுபிடித்தனர். அதில் ‘எனது ஆண்குறியின் நரம்பு உடைந்து போனதால் என்னால் குழந்தை பெற இயலாத காரணத்தால் நாங்களே எங்கள் சாவை செய்கிறோம். இதில் யாருக்கும் எந்த சம்மதமும் இல்லை" என எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.திருமணத்திற்கு பின்பு மனைவியுடன் உடலுறவு கொண்டபோது கணவரின் ஆண்குறியில் நரம்பு உடைந்து விட்டதாகவும் அதன் பிறகு அவரால் உடலுறவு கொள்ள முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து மருத்துவமனையை அணுகாமல் அவர்கள் இருந்துவந்ததோடு, தங்களுக்கு இனி குழந்தை பிறக்காது எனவும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் தான் அவர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர். திருமணம் ஆகி 5 மாதத்தில் தம்பதியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க :"புலி வருது, புலி வருது.. பூனை கூட வராதுங்க !"- அண்ணாமலையை அட்டாக் செய்த அமைச்சர் ஐ.பெரியசாமி
இதையும் படிங்க : G Square Case: ஜி ஸ்கொயர் வழக்கு அதிரடி மாற்றம்..விகடன்,சவுக்கு சங்கர்,மாரிதாஸ் விடுவிப்பு !