"புலி வருது, புலி வருது.. பூனை கூட வராதுங்க !"- அண்ணாமலையை அட்டாக் செய்த அமைச்சர் ஐ.பெரியசாமி
தமிழகத்தில் மிகப்பெரிய எதிர்ப்பு அலைகளை கொண்ட இந்த கட்சி மக்களிடையே நற்பெயர் வாங்க போராடி வருகிறது. மக்கள் பிரச்சனைகள் அனைத்திற்கும் குரல் கொடுத்து வருகிறார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.
தமிழக பாஜக அடுத்த 2026-ம் ஆண்டு தேர்தலில் ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் மிகப்பெரிய எதிர்ப்பு அலைகளை கொண்ட இந்த கட்சி மக்களிடையே நற்பெயர் வாங்க போராடி வருகிறது. மக்கள் பிரச்சனைகள் அனைத்திற்கும் குரல் கொடுத்து வருகிறார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. அதேபோல தமிழக பிரச்சனைகள் குறித்து பாஜக தேசிய தலைவர்களும் தொடர்ந்து பேசி வருகின்றனர்.
பெரும்பான்மையுடன் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. ஆனால் தமிழகத்தில் இருந்து ஒரு எம்.பி மட்டுமே அக்கட்சிக்கு அதுவும் அதிமுக கூட்டணி மூலம் கிடைத்தது. இதனால் 2024-ம் ஆண்டு தேர்தலில் இரட்டை இலக்க எண்ணில் மக்களவை உறுப்பினர்களை பாஜக பெற வேண்டும் என்று திட்டம் தீட்டி வருகிறது. அதற்கான முயற்சியாக திமுக போன்ற பெரிய கட்சியில் இருந்து ஆட்களை தங்கள் கட்சிக்கு சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க :ஸ்டாலின் ஆட்சி நம்பர் 1.. அப்போ கலைஞர் ஆட்சி நல்லா இல்லையா ? உதயநிதிக்கு சவால் விட்ட அண்ணாமலை
தொடர்ந்து திமுக, அதிமுக கட்சிகளை எதிர்த்து நாளுக்கு நாள் அரசியல் செய்து வருகிறது பாஜக. இந்நிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ‘ தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தனது சுயலாபத்திற்காக தமிழக அரசின் மீது குற்றம் சாட்டி வருகிறார். ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்று அவர் கூறியுள்ளார். புலி வருது புலி வருது என்று கூறி பூனை கூட வராது.அண்ணாமலை முதலில் தன்னுடைய முதுகைப் பார்க்க வேண்டும், தமிழ்நாட்டு மக்களை யாரும் ஏமாற்ற முடியாது. மதம் மற்றும் சாதி ரீதியாக தமிழக மக்களிடையே யாராலும் பிரிவினை ஏற்படுத்த முடியாது’ என்று கூறினார்.
இதையும் படிங்க : G Square Case: ஜி ஸ்கொயர் வழக்கு அதிரடி மாற்றம்..விகடன்,சவுக்கு சங்கர்,மாரிதாஸ் விடுவிப்பு !
இதையும் படிங்க : 10 ஆண்டுகளாக பாலியல் தொல்லை..6 முறை கருக்கலைப்பு..லீக் ஆன வீடியோ - அதிரடி திருப்பம் !