ஸ்டாலின் ஆட்சி நம்பர் 1.. அப்போ கலைஞர் ஆட்சி நல்லா இல்லையா ? உதயநிதிக்கு சவால் விட்ட அண்ணாமலை
Annamalai : கொள்கை ரீதியாக திமுக, பாஜகவும் நேரெதிர் கட்சிகள். இருந்தாலும் ஐந்து முறை முதலமைச்சராக இருந்த கருணாநிதி தமிழக மக்களுக்கு நல்லது செய்திருக்கிறார் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
கரூர் மாவட்டம் குளித்தலையில் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், 'பாஜகவின் வளர்ச்சி இதுபோன்ற சிறு சிறு நகரங்களில் தான் இருக்கப் போகிறது. அதை நோக்கி நாங்கள் நகர்ந்து கொண்டிருக்கிறோம் என்றார். கடந்த 8 ஆண்டுகளாக மத்தியில் ஆளும் பாஜக அரசின் நலத்திட்ட உதவிகள் பலவும் குளித்தலை மக்களுக்கு கிடைத்திருக்கிறது. இந்த குளித்தலையை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்ல பல்வேறு திட்டங்கள் வைத்துள்ளோம்.
1957ல் குளித்தலை தொகுதியில் நடந்த இரண்டாவது தேர்தலில் கருணாநிதி போட்டியிட்டு முதல்முறை வெற்றி பெற்றார். கொள்கை ரீதியாக திமுக, பாஜகவும் நேரெதிர் கட்சிகள். இருந்தாலும் ஐந்து முறை முதலமைச்சராக இருந்த கருணாநிதி தமிழக மக்களுக்கு நல்லது செய்திருக்கிறார் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் 1957ல் இருந்த திமுகவும், 2022ல் இருந்த திமுகவும் ஒரே கட்சியா? என்றால் நிச்சயம் கிடையாது. ஒரு குடும்பத்திற்காக கட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இதையும் படிங்க : 10 ஆண்டுகளாக பாலியல் தொல்லை..6 முறை கருக்கலைப்பு..லீக் ஆன வீடியோ - அதிரடி திருப்பம் !
குளித்தலை தொகுதியில் ஒவ்வொரு முறையும் திமுகவிற்கு ஓட்டு போட்டு வெற்றி பெறச் செய்திருக்கிறீர்கள். ஆனால் பின் தங்கிய தொகுதியாக குளித்தலை காட்சியளிப்பது திமுக எதுவும் செய்யவில்லை என்பதை காட்டுகிறது. 70 ஆண்டுகள் திராவிட ஆட்சி. ஆனாலும் மாற்றம் இல்லை. திமுகவை போன்று விளம்பரம் செய்யும் கட்சி பாஜக கிடையாது என்று தெரிவித்தார். மேலும் பேசுகையில், தாத்தா கலைஞர் கருணாநிதியின் ஆட்சி கூட நல்ல ஆட்சி இல்லை.
தனது தந்தை மு.க ஸ்டாலின் ஆட்சி தான் நம்பர் ஒன் என்று கூறும் உதயநிதி ஸ்டாலின் தமிழக மக்களை குழப்புகிறார். அப்படியென்றால் கலைஞர் ஆட்சி அப்ப நல்ல ஆட்சி இல்லையா ?. 250 ஆண்டுகளுக்கு முன்னர் மின்சாரத்தினை கண்டுபிடித்த அறிவியலாளர்கள் வாழ்ந்த பூமியில், மின்சாரம் ஏன் கட் ஆச்சு ? என்றால் அணிலால் தான் என்று கூறி விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்யும் அமைச்சர் உள்ள மாவட்டம் தான் இந்த குளித்தலை' என்று பேசினார்.
இதையும் படிங்க : "திராவிட மாடல் ஆட்சியில் 1 ஆண்டு கூட முடியல.. அதுக்குள்ள நாக்கு தள்ளுது.!" தெறிக்கவிட்ட அண்ணாமலை"
இதையும் படிங்க : G Square Case: ஜி ஸ்கொயர் வழக்கு அதிரடி மாற்றம்..விகடன்,சவுக்கு சங்கர்,மாரிதாஸ் விடுவிப்பு !