என் புருஷன் இருக்கும் வரைக்கும் உல்லாசமாக இருக்க முடியாது!ஸ்கெட்ச் போட்டு கொலை!உடலை என்ன செய்தார்கள் தெரியுமா?

கிருஷ்ணகிரி மாவட்டம் மகராஜகடை அருகே கள்ளநாயக்கன்பள்ளம் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 35 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிணற்றில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

krishnagiri husband murder case...Wife Arrest

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை அடித்து கொலை செய்து உடலில் கல்லை கட்டி கிணற்றில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டம் மகராஜகடை அருகே கள்ளநாயக்கன்பள்ளம் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 35 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிணற்றில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் உடலை மீட்டனர். கொலை செய்யப்பட்ட யார் என்று அடையாளம் தெரியாத நிலையில், இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த பகுதியில் காணாமல் போனவர்கள் யார், யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். 

இதையும் படிங்க;- என் பொண்ணையே லவ் பண்ணுவியா.. கூலிப்படை வைத்து காதலனின் கதையை முடித்த தந்தை.. கண்டும் காணாமல் இருந்த காதலி.!

krishnagiri husband murder case...Wife Arrest

இந்நிலையில்,  ஆத்துகாவாய் பகுதியை சேர்ந்த கல் உடைக்கும் தொழிலாளி மைக்கேல்ராஜ் (36) காணாமல் போனது தெரிய வந்தது. இறுதியில் கொலை செய்யப்பட்டது மைக்கேல்ராஜ் (36) என தெரிய வந்தது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக அவரது  மனைவி ஜோஸ்பின் சிந்து (28) விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனையடுத்து, அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. இறுதியில் கள்ளக்காதல் விவகாரத்தில் கணவனை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். 

இதனையடுத்து,  மைக்கேல்ராஜை அவரது மனைவி ஜோஸ்பின் சிந்து (28), கள்ளக்காதலன் விக்ரம் (19) ஆகியோரை கைது செய்யப்பட்டனர். அவர்கள் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த மைக்கேல்ராஜ், தனது மனைவி, 2 குழந்தைகளுடன் மகராஜகடை அருகே வசித்து வந்தார். கல் உடைக்கும் வேலைக்கு சென்று வந்தார். அவர் வேலை செய்த அதே குவாரியில், கிருஷ்ணகிரி தர்மராஜா நகரைச் சேர்ந்த விக்ரம்(19) வேலை செய்தார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, மைக்கேல்ராஜ் வீட்டுக்கு அடிக்கடி வந்த போது  விக்ரமுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. 

இதையும் படிங்க;- உல்லாசத்துக்கு தடையாக இருந்த உன்னுடைய புருஷனை போட்டு தள்ளிட்டேன்!மனைவியின் ரியாக்சன் எப்படி இருந்தது தெரியுமா?

krishnagiri husband murder case...Wife Arrest

மைக்கேல்ராஜ் வீட்டில் இல்லாத நேரத்தில், இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதை அறிந்த மைக்கேல்ராஜ் மனைவியை கண்டித்தார். கணவர் உயிரோடு இருந்தால் கள்ளக்காதலை தொடர முடியாது என்பதால் இருவரும் மைக்கேல்ராஜை கொலை செய்து  கயிற்றால் உடலில் கல்லை கட்டி கிணற்றில் வீசியது தெரியவந்தது. இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios