என் பொண்ணையே லவ் பண்ணுவியா.. கூலிப்படை வைத்து காதலனின் கதையை முடித்த தந்தை.. கண்டும் காணாமல் இருந்த காதலி.!
மகளின் காதலனை கூலிப்படை வைத்து கொலை செய்த தந்தை உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
thanjavur
தஞ்சாவூர் மாவட்டம் திருமலைசமுத்திரத்தை சேர்ந்தவர் கர்ணன். இவரது இளைய மகன் சக்திவேல் (23). தனியார் பால் கம்பெனி வேன் ஓட்டுநராக உள்ளார். கடந்த 6ம் தேதி வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களிலும் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து வல்லம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், கடந்த 8ம் தேதி அம்மாபேட்டை அருகே ராராமுத்திரைக்கோட்டை பகுதியில் புதுஆற்றில் வெட்டுக் காயங்களுடன் சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கொலை செய்யப்பட்டது சக்திவேல் என்பது உறுதியானது.
சக்திவேல் அடிக்கடி பாலகுருவிடம் அவரது நிலம் விற்பனை குறித்து பேசி செல்வது வழக்கம். இதனால் நிலம் விற்பனை குறித்து பேச வேண்டும் என்று சக்திவேலுவை கடந்த 6ம் தேதி திருமலைசமுத்திரம் பகுதியில் உள்ள தென்னந்தோப்பிற்கு பாலகுரு அழைத்து வந்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த மதுரையைச் சேர்ந்த கூலிப்படையினர் 3 பேர் சக்திவேலுவை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளனர். இதற்கு பாலகுருவின் மகன் துரைமுருகன் மற்றும் வேலையாள் கதிர்வேல் உடந்தையாக இருந்துள்ளனர். பின்னர் சக்திவேலுவின் உடலை புது ஆற்றில் வீசியுள்ளனர்.
Thanjavur
காதலன் சக்திவேல் கொலை செய்யப்பட்டதும் தெரிந்தும் தேவிகா அதை மறைத்துள்ளார். இதையடுத்து சத்யா, துரைமுருகன், கதிர்வேல், தேவிகா மற்றும் கூலிப்படையினர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து, அவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.