வாய், கை, கால்களில் டேப் சுற்றப்பட்ட நிலையில் சடலமாக கிடந்த 82 வயது மூதாட்டி.. கோவையில் பகீர் சம்பவம்!
கோவையில் வாய், கை, கால்களை டேப்பினால் சுற்றப்பட்டு 82 மூதாட்டி கொலை செய்திருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் வாய், கை, கால்களை டேப்பினால் சுற்றப்பட்டு 82 மூதாட்டி கொலை செய்திருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள காந்தி நகரை சேர்ந்தவர் சரோஜினி(82). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். 2 பேருக்கும் திருமணம் முடிந்து பெரிய நாயக்கன் பாளையம் பகுதியில் தனியாக வசித்து வருகின்றனர். இதையடுத்து சரோஜினி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். அவ்வப்போது மகன்கள் 2 பேரும் வந்து தாயை பார்த்து செல்வது வழக்கம். இந்நிலையில், நேற்று காலை இவரது வீட்டிற்கு பால் பாக்கெட் போடுபவர் காலையிலேயே போட்டு சென்று விட்டார். ஆனால் 11 மணியாகியும், பாலை எடுக்காமல் அப்படியே வாசலில் கிடந்தது.
இதையும் படிங்க;- எனக்கு கொல்லி வைப்பனு பார்த்தேனே.. என்ன விட்டு போயிட்டியே ராசா.. நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறி அழுத தாய்.!
இதனால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டினுள் சென்று பார்த்த போது அதிர்ச்சி காத்திருந்தது. அப்போது சரோஜினி வாய் மற்றும் கை - கால்களில் டேப்பால் கட்டப்பட்டு சடலமாக கிடந்தார். மேலும், அவர் அணிந்திருந்த நகைகளையும் காணவில்லை. இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை செய்தது யார்? நகைக்காக கொலை செய்தனரா? அல்லது வேறு ஏதாவது காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் அந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். இதற்கிடையே மூதாட்டியின் வீட்டில் 3 பேர் வாடகைக்கு இருந்ததாகவும், அவர்களை காலை முதல் காணவில்லை என்றும் பொதுமக்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். இதனால் அந்த நபர்கள் மூதாட்டியை கொன்று விட்டு, நகை பணத்தை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதையும் படிங்க;- இப்படி கூடவா ஒரு புருஷன் இருப்பான்.. மனைவியுடன் உல்லாசமாக இருந்தை வளைச்சு வளைச்சு வீடியோ எடுத்து மிரட்டல்.!