எனக்கு கொல்லி வைப்பனு பார்த்தேனே.. என்ன விட்டு போயிட்டியே ராசா.. நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறி அழுத தாய்.!

பெரம்பலூரில் செல்போன் கடை ஊழியரை ஓட, ஓட விரட்டி கொடூரமாக கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் பெரும் 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

cell phone shop employee murder in Perambalur

பெரம்பலூரில் செல்போன் கடை ஊழியரை ஓட, ஓட விரட்டி கொடூரமாக கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் பெரும் 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தேவேந்திர குல வேளாளர் தெருவை சேர்ந்தவர் கோபால். இவரது மகன் வினோத் (28). இவர் பெரம்பலூரில் ஒரு செல்போன் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரும், அவரது நண்பரான கார்த்திக் (25) என்பவரும் நேற்று மாலை நிர்மலா நகரில் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே நின்று பேசிக்கொண்டிருந்தனர். 

இதையும் படிங்க;- கதறியும் விடாத காமக்கொடூரன்.. அரசுப்பள்ளி கழிப்பிடத்தில் வைத்து பள்ளி மாணவியை சீரழித்த கொடூரம்..!

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களுடன் வந்து இறங்கினர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த இருவரும் உயிர் பயத்தில் தலைத்தெறிக்க இருவரும் வெவ்வேறு திசையில் ஓடினர். ஆனால், மர்ம கும்பல் பிரிந்து சென்று அவர்களை விடாமல் பின்தொடர்ந்து விரட்டினர். இதில்,  கார்த்திக் எப்படியோ தப்பித்துவிட்டார். ஆனால், வினோத் அந்த கும்பலிடம் வசமாக சிக்கிக்கொண்டார். இதனையடுத்து, அவரை சரமாரியாக கத்தியால் வெட்டிவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பித்தனர். 

இதையும் படிங்க;-  சினிமாவை மிஞ்சிய பயங்கரம்.. நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடி துடிதுடிக்க படுகொலை.. 2 பேர் ஐசியுவில்.!

இதில், படுகாயமடைந்த அடைந்த வினோத் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வினோத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து, மகன் வினோத்தின் உடலை அவரது தாயார் மல்லிகா பார்த்து கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம கும்பல் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரது நண்பர் கார்த்திக்கிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios