அரசுப் பள்ளி ஆய்வுக்கூடத்தில் வைத்து, 12 ஆம் வகுப்பு மாணவி, உதவி தலைமை ஆசிரியர்  கற்பழித்துவிட்டு அதை சரிக்கட்ட  5 லட்சம் ரூபாய் பெற்றுதருவதாக பேரம் பேசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலையில், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்  உதவித் தலைமை ஆசிரியராக பணி புரிந்துவரும் பாலாஜி, வேதியியல் பாடத்திற்கும் இவர்தான் ஆசிரியர் என்பதால், மாணவிகளை அடிக்கடி ஆய்வுக்கூடத்திற்கு அழைத்து  சென்றுள்ளார்.

இந்த நிலையில், கடந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு முடித்த மாணவி ஒருவர் கர்ப்பமானதாக சொல்லப்படுகிறது. இதனால் அதிர்ச்சியான அந்த மனைவியின் பெற்றோர் கேட்டதற்கு ஆய்வுக்கூடத்தில் வைத்து ஆசிரியர் பாலாஜி தன்னை பலவந்தமாக கற்பழித்ததாகவும், அதையே காரணம் காட்டி பலமுறை தொடர்ந்து மிரட்டி உல்லாசம் அனுபவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, கொண்டலாம்பட்டி போலீசில் புகார் அளித்தனர் அந்த மாணவியின் பெற்றோர்; பள்ளிஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின் பெண் காவல் ஆய்வாளர் புஷ்பராணி என்பவர் அந்த ஆசிரியரால் கர்ப்பமான மாணவியின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு பெற்றுத் தருவதாகவும், ஆசிரியர் மீதான புகாரை வாபஸ் வாங்கவும் கருவைக் கலைக்கச் செய்யும்படியும் மிரட்டியுள்ளார்.

எழைக் குடும்பம் என்பதாலும், காவல் ஆய்வாளரின் மிரட்டலுக்கு அஞ்சியும், ஆசிரியர் பாலாஜி மீதான புகாரை பெற்றோர் வாபஸ் பெற்றுள்ளனர். இந்த நிலையில், அந்த மாணவிக்கு நேர்ந்தது போன்ற கொடுமை வேறு யாருக்கும் நடக்கக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் அங்கு படித்த மாணவி ஒருவர், இந்த தகவலை தனியார் நியூஸ் தொலைக்காட்சிக்கு போன் மூலம் தெரிவித்தார்.

இதையடுத்து, மாணவி பாலியல் பலாத்கார வழக்கில், ஆசிரியரைக் காப்பாற்ற போலீஸ் கட்டப்பஞ்சாயத்து பண்ணுவதை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் அரசுப் பள்ளி ஆய்வகத்தில் நடந்த இந்த பலாத்கார கொடுமையால், மாணவி தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருப்பதும்,காவல்துறை உயர் அதிகாரிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து  காவல் துறை உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில், கொண்டலாம்பட்டி காவல்துறையினர் பள்ளிக்கூடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில்  உதவி தலைமை ஆசிரியர் பாலாஜி தலைமறைவானது தெரியவந்தது.  இதனைத் தொடர்ந்து மாணவியை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார், அந்த காமக்கொடூர ஆசிரியர் பாலாஜியை வழக்கு பதிவு செய்து வலைவீசித் தேடி வருகின்றனர்.

மேலும்,  அரசுப் பள்ளி ஆய்வகத்தில் மாணவியை பலாத்காரம் செய்ததோடு, கர்ப்பிணியான மாணவியை மிரட்டிய ஆசிரியருக்கு ஆதரவாக செயல்பட்ட காவல் ஆய்வாளர் உள்ளிட்டோர் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.