மும்பையை சேர்ந்தவர் தவால் உனத்கட். 25 வயதான இவர் ஓரினச்சேர்க்கையாளர் ஆவார். இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம் மூலம் இவருக்கு ஆசிப் மற்றும் ராவல் என இரண்டு நண்பர்கள் அறிமுகம் ஆகியுள்ளனர். இவர்களில் உனத்கட் மற்றும் ஆசிப் நெருங்கிப் பழகி ஓரினச்சேர்க்கையாளர்களாக இருந்துள்ளனர். அதே சமயம் ஆசிப் மீது ராவலுக்கு காதல் வந்துள்ளது.

இந்த நிலையில் உனத்கட்டுக்கு உடல் ரீதியாக பிரச்சனை வந்துள்ளது.இதனால் அவரை மருத்துவரை சென்று சந்திக்குமாறு ஆசிப் கூறியுள்ளார். ஆனால் இதனை ஏற்க மறுத்து உனத்கட் தொடர்ந்து ஆசிப்பை தன்னுடன் வருமாறு அழைத்துக் கொண்டே இருந்துள்ளார். இதற்குடையே ஆசிப் – ராவலுடன் நெருங்கியுள்ளார். மேலும் ஆசிப் மற்றும் ராவல் மும்பையில் ஒரே வீட்டில் தங்க ஆரம்பித்துள்ளனர்.

இதனால் உனத்கட்டுக்கு கடும் கோபம் ஏற்பட்டுள்ளது. எங்கே ஆசிப் தன்னை பிரிந்து சென்றுவிடுவானோ என்று பயந்துள்ளார். இதனால் ஆசிப் வீட்டுக்கு இது குறித்து பேச உனத்கட் சென்றுள்ளார். அப்போது அங்கு ராவலும் – ஆசிப்பும் நெருக்கமாக இருந்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த உனத்கட் அங்கு இருந்த இரும்பு ராடு ஒன்றை எடுத்து ஆசிப்பை தாக்க முயற்சித்துள்ளார்.

  

இதனை தடுக்க முன்வந்த ராவலுக்கு தலையில் பயங்கரமாக அடி விழுந்தது. ரத்தம் சொட்ட சொட்ட ராவல் கீழே விழுந்த நிலையில் பயந்து போன உனத்கட்டும், ஆசிப்பும் ராவலை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு ராவல் தலையில் தையல் போட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால அதற்கு மறுப்பு தெரிவித்து ராவல் வீட்டிற்கு சென்றுள்ளார்.

மறுநாள் காலையில்ராவத் உயிரிழந்து ரூமில் கிடந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்தபோலீசார் உனத்கட்டை கைது செய்துள்ளனர்.