ஆந்திர மாநிலம் அன்னமையா மாவட்டத்தில் உள்ள குத்திகிபந்த தண்டாவைச் சேர்ந்தவர் ரெட்டப்ப நாயக். இவருக்கு 2 மகன்கள். மூத்த மகன் தாகூர் நாயக் (22), சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். 

போதைக்கு அடிமையாகி வீட்டில் இருந்து அடிக்கடி தங்க நகைகள், பணத்தை திருடி விற்று வந்த மகனை கூலிப்படை ஏவி தந்தை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஆந்திர மாநிலம் அன்னமையா மாவட்டத்தில் உள்ள குத்திகிபந்த தண்டாவைச் சேர்ந்தவர் ரெட்டப்ப நாயக். இவருக்கு 2 மகன்கள். மூத்த மகன் தாகூர் நாயக் (22), சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். கஞ்சா போதைக்கு அடிமையான இவர், வீட்டில் இருந்து அடிக்கடி தங்க நகைகளை திருடி விற்று, மது, கஞ்சா வாங்கி பயன்படுத்தினார். இதனை தட்டிக் கேட்ட தந்தையை கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார்.

இதையும் படிங்க;- எனக்கு கொல்லி வைப்பனு பார்த்தேனே.. என்ன விட்டு போயிட்டியே ராசா.. நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறி அழுத தாய்.!

இதனால் பயந்துபோன குடும்பத்தினர் பெற்ற மகனை கொலை செய்ய திட்டமிட்டனர். இதனையடுத்து, கூலிப்படையினரிடம் 2 லட்சம் கொடுத்து மகனை கொலை செய்யுமாறு தந்தை கூறியுள்ளார். கடந்த ஜூன் 28ம் தேதி தாகூர் நாயக்கை மது ஊற்றி கொடுத்து கொடூரமாக கொலை செய்தனர். அப்பகுதியில் துர்நாற்றம் வீசியதால் அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஆய்வு செய்த போது அழுகிய நிலையில் இளைஞரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இதனிடையே, மகன் காணாமல் போய் 2 மாதமாகியும் புகார் செய்யாத ரெட்டப்ப மீது சந்தேகம் எழுந்தது. அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், தாகூரை கூலிப்படை வைத்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதையும் படிங்க;- சொல்ல சொல்ல கேட்காம அவன நம்பி போனியே!இப்படி உன்ன பண்ணிட்டாங்களே!காதல் திருமணம் செய்த பெண் 37 நாளில் மர்மமரணம்