திருச்செந்தூரில் நகைக்கடையில் திமுக வார்டு செயலாளர், நூதனமான முறையில் தங்க செயினை திருடிச்சென்ற சம்பவம் குறித்த வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

திருச்செந்தூரில் நகைக்கடையில் திமுக வார்டு செயலாளர், நூதனமான முறையில் தங்க செயினை திருடிச்சென்ற சம்பவம் குறித்த வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குரும்பூர் திமுக நகர செயலாளராக உள்ளவர் பாலன் ராஜன். இவரது மனைவி தேவி. இவர் அங்கமங்கலம் ஊராட்சி திமுக 8 ஆவது வார்டு செயலாளராக உள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் திருச்செந்துர் வடக்கு ரத வீதியில் உள்ள நகைக்கடையில் செயின்களை பார்த்துக் கொண்டிருந்தார்.

இதையும் படிங்க: ஓய்வு பெற்ற அரசு அதிகாரி, பசுவுடன் உடலுறவு.. தலையில் அடித்து தூக்கிச் சென்ற போலீல்.. நாயுடனும் உல்லாசம்.

அப்போது கடை ஊழியர் கவனிக்காத சமயத்தில் தான் கொண்டுவந்த கவரிங் செயினை வைத்து விட்டு, தங்க செயினை தனது பைக்குள் மறைத்து வைத்து திருடிச் சென்றார். இதை அடுத்து கடை ஊழியர்கள் நகையை சரிபார்த்தபோது, அதில் கவரிங் செயின் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்தனர்.

இதையும் படிங்க: பட்டப்பகலில் காவல் நிலையம் அருகே 2 பேர் ஓட ஓட விரட்டி படுகொலை.. அலறி அடித்து ஓடிய பொதுமக்கள்..!

அப்போது திமுக நிர்வாகி தேவி கவரிங் நகையை மாற்றி வைத்துவிட்டு தப்பிச்சென்றது தெரியவந்தது. இதை அடுத்து கடை உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். இதனிடையே திமுக பெண் நிர்வாகி நகையை திருடியது குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.