பட்டப்பகலில் காவல் நிலையம் அருகே 2 பேர் ஓட ஓட விரட்டி படுகொலை.. அலறி அடித்து ஓடிய பொதுமக்கள்..!
மணிமங்கலம் காவல் நிலையம் அருகே நான்கு பேர் கொண்ட கும்பலால் 2 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மணிமங்கலம் காவல் நிலையம் அருகே நான்கு பேர் கொண்ட கும்பலால் 2 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மணிமங்கலம் காவல் நிலையம் அருகே இரண்டு இளைஞர்கள் 4 பேர் கொண்ட கும்பலால் ஓட ஒட விரட்டி சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இதனை, கண்ட அப்பகுதி மக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். பின்னர், அந்த கும்பல் ஒரு அச்சமும் இல்லாமல் அங்கிருந்து சென்றது. உடனே இந்த இரட்டை கொலை தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் முன்விரோதம் காரணமாக கொலை நடைபெற்றது தெரியவந்தது. கடந்த மார்ச் மாதம் 31-ம் தேதி அதே பகுதியை சேர்ந்த ரவுடி தேவேந்திரன் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த படுகொலையில் முக்கிய குற்றவாளிகளான சுகன் என்ற சுரேந்திரன், விக்கி என்கின்ற விக்னேஷ் ஆகியோர்கள் சிறை சென்று சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கொலை தொடர்பாக மணிமங்கலம் பகுதியை சேர்ந்த விக்னேஷ்வரன், புஷ்பராஜ், லோகேஸ்வரன், தில்லிபாபு ஆகிய 4 பேர் தாம்பரம் காவல்நிலையத்தில் சரணடைந்தனர்.