படுக்கையறையில் கள்ளக்காதலனுடன் உல்லாசத்தில் ஈடுபட்ட தாயை மகள் கையும் களவுமாக பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். மேலும் தாய் மற்றும் கள்ளக்காதல் மீது அப்பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

படுக்கையறையில் கள்ளக்காதலனுடன் உல்லாசத்தில் ஈடுபட்ட தாயை மகள் கையும் களவுமாக பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். மேலும் தாய் மற்றும் கள்ளக்காதல் மீது அப்பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உத்திரபிரதேசம் மாநிலம் ஜான்சி நவாப்பாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது.

சமூகத்தில் பரவலாக திருமணத்துக்கு புறம்பான உறவுகள் அதிகரித்து வருகிறது, ஆண் பெண் என இருபாலரும் இது போன்ற உறவில் ஈடுபட்டு வாழ்க்கை துளைக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதேபோல் பெரும்பாலான கொலை, தற்கொலை சம்பவங்களும் திருமணத்துக்கு புறம்பான உறவை மையமாக வைத்து அரங்கேறி வருகிறது. இவற்றை தடுக்க காவல் துறையும், அரசும் எத்தனை நடவடிக்கை எடுத்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. 

இந்த வரிசையில் திருமணமான பெண் கள்ளக்காதலனுடன் படுக்கையறையில் உல்லாசத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில் மகளிடம் கையும் களவுமாக சிக்கியுள்ளார். முழு விவரம் பின் வருமாறு:- ஜான்சி நவாப் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோச்சப்பன்வாரியைச் சேர்ந்தவர் கௌரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) திருமணமான இவருக்கு ஒரு மகள் உள்ளார். தன் மகள் திருமணம் செய்துகொள்ளும் வயதில் இருந்தாலும், அந்ந பெண் திருமணத்துக்கு புறம்பான உறவில் ஈடுபட்டு வந்தார். 

இதையும் படியுங்கள்: ஜீன்ஸ் பேண்ட் போடக்கூடாது என கண்டீஷன் போட்ட கணவன் கொலை... கல்யாணம் ஆன 4 மாதத்தில் புது பெண் வெறிச்செயல்.

தாயின் கள்ள உறவு மகளுக்கு தெரிந்தது, இதனால் அதிர்ச்சி அடைந்த மகள், தயவு செய்து இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என தாயை கேட்டுக் கொண்டார், ஆனால் அந்தப் பெண் அதை கேட்கவே இல்லை, பல நேரங்களில் தனது கள்ளக்காதலனுடன் ஊர் சுற்றி பல இடங்களில் அறை எடுத்து உல்லாசம் அனுபவித்து வந்தார்.

இதனால் மகள் தனது தாயை தீவிரமாக கண்காணிக்க ஆரம்பித்தார், இந்நிலையில் ஒரு நாள் கள்ளக்காதலனை வீட்டுக்கே வரவழைத்து அவருடன் உல்லாசத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது மகளுக்கு சந்தேகம் ஏற்பட்டு, தாயின் படுக்கையறை கதவை தட்டினார், நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கப்படவில்லை, இதனால் சந்தேகம் வலுத்தது, ஒரு கட்டத்தில் போராடி மகள் கதவை திறந்தால், அப்போது தனது தாய் கள்ளக்காதலனுடன் அறையில் இருந்தார். இதை நேரில் கண்ட மகள் உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

இதற்கிடையில் மகளுக்கும் தாயுக்கும் இடையேவாக்குவாதம் ஏற்பட்டது. கள்ளக்காதலனுடன் தாய் இருப்பதை பார்த்து மகள் குமுறி அழுதார், ஆனால் அவரது தாய் கள்ளக்காதலை பாதுகாப்பதிலேயே குறியாக இருந்தார், பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்கள் இருவரையும்காவல் நிலையம் அழைத்து சென்றனர், இருவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். 

இதையும் படியுங்கள்: மகளின் காதலுக்கு எதிர்ப்பு.. வருங்கால மாமியாரை சல்லி சல்லியால் வெட்டி படுகொலை செய்த இளைஞர்..!

மேலும் திருமணமான ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே திருமணத்திற்கு புறம்பான உறவு அதிகரித்து வருகிறது. சமூகத்தில் ஒழுக்கம் குறைந்து வருவதையே இது காட்டுகிறது, கணவன் மனைவிக்கு இடையில் பரஸ்பர அன்பு, நம்பிக்கை இல்லாததே இதுபோன்ற செயல்களுக்கு காரணம் என வேதனை தெரிவித்தனர்.