ஜீன்ஸ் பேண்ட் போடக்கூடாது என கண்டீஷன் போட்ட கணவன் கொலை... கல்யாணம் ஆன 4 மாதத்தில் புது பெண் வெறிச்செயல்.
ஜீன்ஸ் பேண்ட் அணிய கூடாது என கட்டுப்பாடு விதித்த கணவனை மனைவி கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. இது ஜார்கண்ட் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜீன்ஸ் பேண்ட் அணிய கூடாது என கட்டுப்பாடு விதித்த கணவனை மனைவி கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. இது ஜார்கண்ட் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் மனைவியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது, அது ஆயிரம் காலத்து பயிர் என்றெல்லாம் கூறப்படுவது உண்டு, ஆனால் கணவன் மனைவிக்கு இடையே உள்ள பரஸ்பர ஒத்துழைப்பு, புரிதலை பொருத்தே அவர்களின் வாழ்க்கை அமைகிறது. எத்தனை பொய்களைச் சொல்லி திருமணம் செய்திருந்தாலும் திருமணத்திற்கு பின்னர் ஒவ்வொருவரின் உண்மை முகமும் வெளியில் தெரிந்துவிடும்.
அந்த வகையில் திருமணத்திற்கு பின்னர் மனைவியை ஜீன்ஸ் பேண்ட் அணிய கூடாது என கட்டுப்பாடு விதித்த கணவனை மனைவி கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.முழு விவரம் பின்வருமாறு:- ஜார்கண்ட் மாநிலம் ஜம்தாரா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியான தோர்பிதா என்ற கிராமத்தை சேர்ந்த ஒரு இளைஞர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு புஷ்பா ஹெம்ப்ராம் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
கடந்த 4 மாதமாக அவர்களது வாழ்க்கை மிக மகிழ்ச்சியாகவே சென்றது. இந்நிலையில் புஷ்பா கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோபால்பூர் கிராமத்தில் நடந்த கண்காட்சி ஒன்றுக்கு ஜீன்ஸ் பேண்ட் அணிந்து சென்றார். அப்போது அவரைத்தடுத்த கணவர் திருமணம் ஆனதற்கு முன்பு ஜீன்ஸ் அணிவது சரி, ஆனால் இப்போது உனக்கு திருமணமாகி விட்டது இப்போது ஜீன்ஸ் அணிந்து செல்வது கூடாது என தன் மனைவிக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
இதில் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது தான் என்ன உடை அணிய வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்க கூடாது என மனைவி புஷாப் கணவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதில் ஒரு கட்டத்தில் வாக்குவாதம்முற்றி கைகலப்பாக மாறியது, அப்போது சமையற்கட்டில் இருந்த கத்தியால் கணவனை புஷ்பா சரமாரியாக குத்தினார், அதில் கணவர் ரத்த வெல்லத்தில் சரிந்தார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர் தன்பாத் உள்ள PMCH மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர்.
அப்போது கணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் இது குறித்து தெரிவித்த புஷ்பாவின் மாமனார் தனது மருமகள் ஜீன்ஸ் அணியக்கூடாது என மகன் தடுத்ததால் மருமகள் தன் மகனை கத்தியால் குத்தியதாக கூறினார், அடுத்த புஷ்பாவும் தன் கணவனைப் தான் குத்திக் கொன்றதை ஒப்புக்கொண்டார். இவர்களுக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது, இந்நிலையில் அங்கு வந்த போலீசார் மனைவி புஸ்பா மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.