திருச்சியில் மகள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயை வெட்டி கொலை செய்த சம்பவம் தொடர்பாக காதலனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

திருச்சியில் மகள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயை வெட்டி கொலை செய்த சம்பவம் தொடர்பாக காதலனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

திருச்சி மாவட்டம் மேலகல்கண்டார்கோட்டை அண்ணா தெருவை சேர்ந்தவர் சையது. இவரது மனைவி சாய்தாபேகம்(35). ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார். கடந்த 15ம்தேதி வீட்டில் சாய்தாபேகம் வீட்டில் அலறும் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் திரண்டபோது வீட்டின் ஓடுகளை பிரித்து கொண்டு வாலிபர் ஒருவர் அரிவாளுடன் முகத்தில் கர்ச்சீப் கட்டியபடி வெளியேறி தப்பி சென்றார்.

இதையும் படிங்க;- விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர் துடிதுடிக்க வெட்டி படுகொலை.. பதற்றம்.. போலீஸ் குவிப்பு.!

இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் சாய்தாபேகம் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி சாய்தாபேகம் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மேலகல்கண்டார்கோட்டை மூகாம்பிகை நகரை சேர்ந்த ஜோசப்ராஜ்(எ) மணிகண்டன்(24) என்பவர் தான் சாய்தாபேகத்தை வெட்டியது தெரியவந்தது. 

இதையும் படிங்க;- ஒதுக்குப்புறமாக உல்லாசம்.. கள்ளக்காதலி சொன்ன அந்த ஒருவார்த்தை.. வேலை முடிந்ததுமே கள்ளக்காதலன் செய்த பயங்கரம்!

வெளிநாடு சென்று திரும்பிய ஜோசப்ராஜ், சாய்தாபேகத்தின் மூத்த மகளை காதலித்து வந்துள்ளார். இதற்கு சாய்தாபேகம் எதிர்ப்பு தெரிவித்ததால் அவருடன் ஜோசப்ராஜ் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ஜோசப்ராஜ் சாய்தாபேகத்னை வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து ஜோசப்ராஜை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இதையும் படிங்க;- ஃபர்ஸ்ட் நைட் முடிந்த மறுநாளே இளம்பெண் செய்த காரியம்.. 15 லட்சத்தை இழந்த புதுமாப்பிள்ளை கதறல்.!