விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர் துடிதுடிக்க வெட்டி படுகொலை.. பதற்றம்.. போலீஸ் குவிப்பு.!
ஆற்காடு தொகுதி விடுதலை சிறுத்தை கட்சியின் இளைஞர் எழுச்சி பேரவை செயலாளராக இருந்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில், நேற்று காலை மழையூர் கிராமத்திலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தார்.
கலவை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த மழையூர் கிராமத்தை சேர்ந்தவர் மாசிலாமணி. இவரது மகன் பார்த்தசாரதி(36). இவர் ஆற்காடு தொகுதி விடுதலை சிறுத்தை கட்சியின் இளைஞர் எழுச்சி பேரவை செயலாளராக இருந்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில், நேற்று காலை மழையூர் கிராமத்திலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தார்.
இதையும் படிங்க;- ஃபர்ஸ்ட் நைட் முடிந்த மறுநாளே இளம்பெண் செய்த காரியம்.. 15 லட்சத்தை இழந்த புதுமாப்பிள்ளை கதறல்.!
அப்போது, வழிமறித்த ஒரு கும்பல் பார்த்தசாரதியை கண்ணிமைக்கும் நேரத்தில் சரமாரியாக வெட்டியது. இதில், கழுத்து, கை, கால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த வெட்டு விழுந்ததையடுத்து அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதுதொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பார்த்தசாரதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதையும் படிங்க;- ஒரு பேராசிரியைக்கு இவ்வளவு ஒரு காமவெறியா? கள்ளக்காதலை துண்டித்த காதலன்.. 40 இடங்களில் கத்தியால் குத்தி கொலை
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமாக என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சந்தேகத்தின் பேரில் 2 பேரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், தலைமறைவாக உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் ஒருவரை தீவிரமாக தேடி வருகின்றனர். அப்பகுதியில் பதற்றம் நீடிப்பதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க;- லாட்ஜில் ரூம் போட்டு படுக்கை அறையில் பெண் நிர்வாகியுடன் பாஜக தலைவர் உல்லாசம்? வீடியோ வைரல்..!