Asianet News TamilAsianet News Tamil

கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான தலித் சிறுமி… டீசல் ஊற்றி கொளுத்திய குற்றவாளிகள்… உ.பி.யில் பயங்கரம்!!

உத்தரப்பிரதேசத்தில் தலித் சிறுமி கூட்டு பாலியன் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு தீவைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

dalit girl gang raped and set on fire by two mens at uttar pradesh
Author
First Published Sep 21, 2022, 11:43 PM IST

உத்தரப்பிரதேசத்தில் தலித் சிறுமி கூட்டு பாலியன் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு தீவைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் இரண்டு தலித் மைனர் சகோதரிகள் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். இது மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதை காட்டுகிறது. பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுமிகள் இருவரும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது உறுதியானது. இந்த வழக்கில் 6 பேரை உத்தரப் பிரதேச போலீஸார் கைது செய்தனர்.

இதையும் படிங்க: காதலியுடன் உடலுறவில் ஈடுபட்டுக் கொண்டே வீடியோ.. சமூக வலைதளத்தில் வெளியிட்ட டாக்டர்.. கொடுர கொலை.

இதனிடையே உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து அதிகாரிகளுடன் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது லக்கிம்பூர், பிலிபித், லக்னோ, கோண்டா, பதாவுன் மற்றும் அம்ரோஹா ஆகிய இடங்களில் நடந்த பெண் கொலைகள் தொடர்பான சம்பவங்களில் அலட்சியமாக இருந்த அதிகாரிகளின் பணியை ஆய்வு செய்தார். இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் பிலிபிட்டின் குன்வார்பூர் கிராமத்தில் தலித் சிறுமி ஒருவர் இரண்டு ஆண்களால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். பின்னர் அந்த சிறுமியை குற்றவாளிகள் டீசலை ஊற்றி எரித்துள்ளனர்.

இதையும் படிங்க: வீடு வீடாக சென்று ரகசிய கேமரா.. ஆன்டிகள், இளம்பெண்கள் குளிப்பதை அங்குலம் அங்குலமாக ரசித்த வாலிபர்கள்..!

உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்ட அந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அந்த சிறுமி உயிரிழந்தார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். உயிரிழந்த சிறுமியின் உடல் லக்னோவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்கு பிறகு உடல் பிலிபிட்டில் உள்ள அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios