வீட்டில் டியூஷன் எடுப்பதாகக் கூறி மதுபோதையில் சிறுமிகளை பலாத்காரம் செய்த ஆசிரியரை பெற்றோர் செருப்பால் அடித்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தெலங்கானா மாநிலம் நாகர் கர்னூல் மாவட்டம் பெத்தாபுரத்தை சேர்ந்தவர் சரத். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வனபர்த்தி மாவட்டம், கோபால்பேட்டா மண்டல கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியில் சேர்ந்தார். தொடர்ந்து சரத் தனது வீட்டில் 5-ம் வகுப்பு மாணவிகளுக்கு டியூஷன் எடுப்பதாகக் கூறியுள்ளார். 

இதையும் படிங்க;- அண்ணியுடன் ஜல்சாவுக்காக ஏக்கத்தில் தவித்த கொழுந்தன்... உல்லாசத்திற்கு வரமறுத்த மின்னலுக்கு நடந்த கொடூரம்..!

இதனால், தனியார் பள்ளியின் 5-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் ஏராளமானோர் சரத்திடம் டியூஷன் சேர்ந்து கல்வி பயின்று வந்தனர். இவர்களில் பல சிறுமிகளை மதுபோதையில் அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில், பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் தனது பெற்றோரிடம் கதறியபடி நடந்தவற்றை கூறியுள்ளார். இதைக்கேட்டு, ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் மற்றும் சக மாணவிகளின் பெற்றோர் தலைமை ஆசிரியர் முறையிட்டனர். 

பின்னர், கொலப்பூர் என்ற இடத்துக்கு தேர்வு எழுத சென்ற சரத்தை அவர்கள் தேடிச் சென்று விரட்டி விரட்டி செருப்பால் அடித்து உதைத்தனர். பின்னர், போலீசில் ஒப்படைத்தனர். இதனையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.