Asianet News TamilAsianet News Tamil

துபாயில் இருந்து சென்னைக்கு 20 லட்சம் மதிப்பு தங்கம் கடத்தல்.. சென்னையில் விமான நிலையத்தில் பரபரப்பு !!

துபாயிலிருந்து சென்னைக்கு  விமானத்தில் கடத்தி வந்த ரூ.20.3 லட்சம் மதிப்புடைய தங்கத்தகடு மற்றும் மின்னணு சாதனங்கள், சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Chennai airport police investigation 20 lakh smuggling from Dubai to Chennai
Author
First Published Oct 30, 2022, 3:35 PM IST

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்:

துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனா்.  அப்போது சென்னையைச் சேர்ந்த ஒரு ஆண் பயணி மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இந்த பயணியை நிறுத்தி அவருடைய உடமைகளை சோதனை விட்டனர்.

Chennai airport police investigation 20 lakh smuggling from Dubai to Chennai

இதையும் படிங்க..மதுரை உசிலம்பட்டியில் தெரிந்த எலான் மஸ்க்கின் சாட்டிலைட் - இணையத்தில் வைரலாகும் சூப்பர் வீடியோ !!

சென்னை விமான நிலையம்:

அந்த பயணியின்  உடைமைகளில்  ஏராளமான மின்னணு சாதனங்கள் மற்றும் வெளிநாட்டு சிகரெட்கள் எடுத்து வந்திருந்தாா். அதோடு அதில் ஒரு டிவிடி பிளேயருக்குள் தங்கத்தகடு மறைத்து வைத்திருந்ததையும் கண்டுபிடித்தனர்.அந்த தங்கத்தகடு 385 கிராம். அதன் சர்வதேச மதிப்பு ரூபாய் 17.15 லட்சம். இதையடுத்து சுங்க அதிகாரிகள், அந்த தங்கத்தகடை பறிமுதல் செய்தனா்.

இதையும் படிங்க..நவம்பர் 1 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

சுங்க அதிகாரிகள் விசாரணை:

மேலும் அதே பயணி ரூபாய் 3.15 லட்சம் மதிப்புடைய மின்னணு சாதனங்களையும்  உரிய ஆவணங்கள்  இல்லாமல் மறைத்து எடுத்து வந்திருந்தாா். அதையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, அந்த ஒரே பயணியிடமிருந்து  ரூபாய் 20.30 லட்சம் மதிப்புடைய தங்கத்தகடு மற்றும் மின்னணு சாதனங்கள், வெளிநாட்டு சிகரெட்களை பறிமுதல் செய்தனர். அந்தப் பயணியை கைது செய்து சுங்க அதிகாரிகள் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

இதையும் படிங்க..100 கடைகள் ஓகே! ராஜினாமா செய்யுங்க.. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அண்ணாமலை விட்ட சவால் !

Follow Us:
Download App:
  • android
  • ios