Asianet News TamilAsianet News Tamil

கார் ரேஸில் ஈடுபட்ட கல்லூரி மாணவி...! தூக்கி வீசப்பட்ட இளைஞர்... பதபதைக்கும் காட்சிகள்..!

கோவையில் கார் ரேஸில் சென்ற கல்லூரி மாணவியின் கார் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அந்த மாணவியின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

car accident...college student
Author
Tamil Nadu, First Published Feb 21, 2019, 3:49 PM IST

கோவையில் கார் ரேஸில் சென்ற கல்லூரி மாணவியின் கார் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அந்த மாணவியின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

கோவை பீளமேடு அருகே கொடிசியா தொழிற்காட்சியகம் உள்ளது. இந்த கொடிசியா தொழிற்காட்சியகம் சாலையை சுற்றி 4 பள்ளிகளும், 5 கல்லூரிகளும் உள்ளன. அதேபோல நீண்ட சாலையான இந்த சாலையில் கல்லூரி மாணவர்கள் இருசக்கர வாகனங்களையும், கார்களையும் போட்டி போட்டுக்கொண்டு அதிவேகமாக ஓட்டி வருவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. car accident...college student

இந்நிலையில் நேற்று மாலை TN 38 AJ 1383 என்ற சொகுசு காரும் மற்றொரு சொகுசு காரும் சுமார் அதிவேகத்தில் ஜென்னி கிளப் பகுதியில் இருந்து கொடிசியா தொழிற்காட்சி வளாகம் சாலை வழியாக அதிவேகமாக போட்டி போட்டுக்கொண்டு ரேஸில் ஈடுபட்டுள்ளன. அப்போது இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த இளைஞர் வாகனத்தை வளைக்கும் பொழுது, விதியை மீறி ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் சொகுசு காரை ஓட்டி வந்தவர் இருசக்கர வாகனத்தின் மீது மோதினார். car accident...college student

இதில் தூக்கி வீசப்பட்ட பாலாஜி படுகாயமடைந்தார். ஆனால் அவர் மீது மோதிய கார் நிற்காமல் மீண்டும் அதிவேகமாக சென்று விட்டது. உடனே படுகாயமடைந்த பாலாஜியை பொதுமக்கள் மீட்டு அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். car accident...college student

இதில் விபத்து ஏற்படுத்திய காரை ஓட்டி வந்தது குறிச்சி ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்த ராஜதுரை என்பவரது மகள் தர்சனா ரூத்(21) என்பது தெரியவந்தது. தனியார் கல்லூரியில் படித்து வரும் இவர் தனது தோழியுடன் கார் ரேஸில் ஈடுபட்ட விபத்தை ஏற்படுத்தியுள்ளார். விபத்தில் காயமடைந்த பாலாஜியின் தந்தை கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில் 3 பிரிவுகளில் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios