சென்னை காவல் கட்டுப்பட்டு அறைக்கு கடந்த 24ம் தேதி இரவு அவசர அழைப்பு ஒன்று வந்தது.  அதில் பேசிய பெண் ஒருவர், தன்னை ஒருவர் அடித்து உதைத்து செல்போனை உடைத்து விட்டதாக கூறியுள்ளார். பிறகு காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து போலீசார் சம்பவம் குறித்து தேனாம்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். 

அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, இளம்பெண் ஒருவர் போதையில்  பேச முடியாத நிலையிலும் இருந்தார். உடனே போலீசார் இளம்பெண்ணிடம் சம்பவம் குறித்து அவரது நண்பர்கள் உதவியுடன் எழுதி வாங்கி கொண்டு அவரது நண்பர்களுடன்  அனுப்பி வைத்தனர். 

பின்னர் சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது: கோவையை சேர்ந்த ஷெண்பா , கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் வேலை பார்த்து வந்தார்.  அதேநேரம், ஸ்டார் ஹோட்டல்களில் நடக்கும் சின்ன சின்ன நிகழ்ச்சிகளை ஷெண்பா செய்து வந்துள்ளார். அப்போது, ஸ்டார் ஹோட்டல்களில் நடந்த நிகழ்ச்சியில், நண்பர்கள் மூலம் பெரம்பூரை சேர்ந்த  மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் ஐஸ் கிரீம் ஷாப் நடத்தி வரும் தினேஷ் என்பவருடன் நட்பு ஏற்பட்டது. தினேஷ் தனக்கு தெரிந்த நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். 

ஒரு கட்டத்தில் நட்பு காதலாக மாறி இருவரும் பல இடங்களில் சுற்றி வந்துள்ளனர். தினேஷ்  போதை பழக்கத்திற்கு அடிமையானவர். அவர் போதை பொருள் பயன்படுத்தும்போது, தனது காதலி ஷெண்பாவுக்கும் கொடுத்துள்ளார்.

ஷெண்பாக்கு போதை பிடித்திருந்ததால் அதை விரும்பி தினேஷுடன் தொடர்ந்து எடுத்து வந்துள்ளார்.  பின்னர் தினேஷுடன் தனியாக கணவன் மனைவி போல் கடந்த 6 மாதங்களாக ஷெண்பா குடும்பம் நடத்தி வந்துள்ளார். 

இதனிடையே, தினேஷ்க்கு திருமணம் நடந்து குழந்தைகள் இருப்பது ஷெண்பாவுக்கு தெரிய வந்தது. இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இருந்தாலும் ஷெண்பா போதைக்கு அடிமையானதால் அசானுடன் தொடர்பை விட முடியவில்லை. இதற்கிடையே ஷெண்பாவுக்கு வேறு ஒரு ஆண் நண்பருடன் தொடர்பு ஏற்பட்டது. இது அசானுக்கு பிடிக்கவில்லை. இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களாக ஷெண்பா வடபழனியில் ஆண் நண்பருடன் தனியாக தங்கியிருந்துள்ளார். 

கடந்த 24ம் தேதி ஷெண்பாவின் தோழியின் பிறந்த நாள் விழா அடையாறில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்தது. அதில் தினேஷ்ம் கலந்து கொண்டார். அப்போது, ஷெண்பா தனது ஆண் நண்பருடன் நெருக்கமாக இருப்பதை பார்த்து அசான் ஆத்திரமடைந்து ஓட்டலில் உள்ள கழிவறைக்கு அழைத்து சென்று கடுமையாக தாக்கி செல்போனை உடைத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். பின்னர் ஷெண்பா தனது காதலன் தினேஷ் போதைக்கு தன்னை  அடிமையாக்கி தன்னுடைய கற்பை சீரழித்ததாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் இந்த சம்பவம் பற்றி அவரது காதலன் தினேஷிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.