Asianet News TamilAsianet News Tamil

வாயை பொத்தி இளம்பெண்ணை வீட்டிற்குள் தூக்கிச்சென்ற வாலிபர்.. அப்புறம் என்ன நடந்தது தெரியுமா?

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கப்பலாங்கரையை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண். சம்பவத்தன்று இவர் தனது வீட்டு முன்பு நின்று கொண்டு செல்போனை பார்த்து கொண்டிருந்தார். 

Attempted rape of Young Women in coimbatore
Author
First Published Jul 26, 2023, 5:37 PM IST | Last Updated Jul 26, 2023, 5:37 PM IST

இளம்பெண்ணை வீட்டிற்குள் தூக்கி சென்று பலாத்காரம் செய்ய முயன்ற டிரைவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கப்பலாங்கரையை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண். சம்பவத்தன்று இவர் தனது வீட்டு முன்பு நின்று கொண்டு செல்போனை பார்த்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த டிரைவர் சதீஷ் (37) என்பவர் இளம்பெண்ணின் வாயை மூடி அவரை வீட்டிற்குள் தூக்கி சென்றார். 

இதையும் படிங்க;- வினித்தை கொலை செய்து விட்டு நீ உயிரோடு இருக்கிறாயா? பழிக்கு பழி! மருது சேனை அமைப்பின் மாநில பொருளாளர் கொலை.!

Attempted rape of Young Women in coimbatore

பின்னர் அவரை பலாத்காரம் செய்ய முயன்றார். ஆனால், இளம்பெண் அலறியதால் அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதை பார்த்ததும் அந்த பெண்ணை மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். 

இதையும் படிங்க;-  அண்ணா ப்ளீஸ் என்ன விட்டுடுங்க.. காதலனுடன் பைக் ரைட் போன இளம்பெண்.. 10 காமக்கொடூரர்களால் கூட்டு பலாத்காரம்.!

Attempted rape of Young Women in coimbatore

இதுகுறித்து இளம்பெண் நெகமம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய பிறகு  இளம்பெண்ணை வீட்டிற்குள் தூக்கி சென்று பலாத்காரம் செய்ய முயன்ற டிரைவர் சதீஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios