வினித்தை கொலை செய்து விட்டு நீ உயிரோடு இருக்கிறாயா? பழிக்கு பழி! மருது சேனை அமைப்பின் மாநில பொருளாளர் கொலை.!
விருதுநகர் மேலதெருவில் உள்ள குப்பையா தெருவை சேர்ந்தவர் குமரவேல் (47). இவர் மருது சேனை அமைப்பின் மாநில பொருளாளராக செயல்பட்டு வருகிறார். மேலும், விருதுநகர் நகராட்சியில் மார்க்கெட் குத்தகை உள்பட பல்வேறு தொழில்களை செய்து வந்தார்.
விருதுநகரில் மருது சேனை அமைப்பின் மாநில பொருளாளர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மேலதெருவில் உள்ள குப்பையா தெருவை சேர்ந்தவர் குமரவேல் (47). இவர் மருது சேனை அமைப்பின் மாநில பொருளாளராக செயல்பட்டு வருகிறார். மேலும், விருதுநகர் நகராட்சியில் மார்க்கெட் குத்தகை உள்பட பல்வேறு தொழில்களை செய்து வந்தார்.
இதையும் படிங்க;- பாட்டி.. அம்மா கிட்ட சொன்னாலும் கண்டுக்கல.. என்ன அந்த மாமா கண்ட இடத்தில் கை வைத்து இப்படிலாம் பண்ணாரு.!
இந்நிலையில், குமரவேல் நேற்று மாலை தேசபந்து திடல் எதிரே மாம்பழ பேட்டையில் உள்ள தனது அலுவலகத்தில் குமரவேல் கணக்குகளை சரி பார்த்து கொண்டிருந்தார். அங்கு அவரது மனைவியின் தங்கை ரூபி (40), உறவினர் ராம்குமார் (34) ஆகியோரும் உடனிருந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் பயங்கர ஆயுதங்களுடன் அலுவலகத்தில் நுழைந்தனர். இவர்களை தடுக்க முயன்ற ராம்குமார் மற்றும் ரூபிக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.
பின்னர், குமரவேலுவை சரமாரியாக வெட்டி கொலை செய்து அங்கிருந்து தப்பித்தனர். உடனே இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குமரவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், படுகாயமடைந்த ராம்குமார் மற்றும் ரூபி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க;- நெல்லையில் இளைஞர் ஆணவக் கொலையா? உண்மை நிலவரம் என்ன? காவல்துறை கொடுத்த விளக்கம்..!
இந்த கொலை தொடர்பாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கடந்த மாதம் 18-ம் தேதி காரைக்குடியில் வினித் கொலைக்கு பழிக்கு பழியாக குமரவேலை அலுவலகத்தில் புகுந்து வெட்டி படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மருது சேனை அமைப்பின் பொருளாளர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.