சிறுமியை ஏமாற்றி கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்து, அதனை செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம், பஞ்சப்பூர் வடக்கு பிள்ளையார் கோவில் தெருவில் வசித்துவரும் 15 வயது சிறுமியை ஏமாற்றி கட்டாயபடுத்தி பாலியல் வன்கொடுமை செய்தும், அதனை செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டியும், வீடியோவை மற்றவர்களுக்கு பகிர்ந்ததாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த புகாரை விசாரணை செய்ததில் 22 வயதான பிரகாஷ், 21 வயதான பரத் ஆகியோரை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த விசாரணையில் பரத் என்பவர் மீது கடந்த 2021ம்ஆண்டு சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கு நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு..“முக்கிய துறை எல்லாம் போச்சு..” முதல்வரை டம்மியாக்கிய துணை முதல்வர் - மகாராஷ்டிராவில் அதிரடி திருப்பம்!

பிரகாஷ் மற்றும் பரத் ஆகியோர்கள் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுவர்கள் என விசாரணையில் தெரியவருவதால், மேற்கண்ட எதிரிகளின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்யப்பட்டது.

திருச்சி மாநகர காவல் ஆணையர் G. கார்த்திகேயன், இருவரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார். இதுபோன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே மக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு..“கஞ்சா பூ கண்ணாலே-னு பாட்டு வேற !” கார்த்தியின் விருமனுக்கு ப்ரோமோஷன் செய்யும் ஜெயக்குமார் !