ஒரு பாதிரியார் செய்யுற வேலையா இது? கர்ப்பிணி பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்..
தேவாலயத்திற்கு வந்த பெண்ணை 14 வயதில் இருந்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த பாதிரியார் கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே, கீழக்கோட்டை கிராமத்தில் உள்ள தேவாலயத்தில், வினோத் ஜோஸ்வார் என்ற நபராக பாதிரியாராகா பணியாற்றி வருகிறார். இந்த சூழலில், அந்த தேவாலயத்திற்கு பாட்டு கிளாஸுக்கு வந்த பெண்ணை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். 14 வயது முதலே அப்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
மொபைல் பயன்படுத்துவதைத் தடுத்த தாய்... பழி வாங்க திட்டம் போட்ட சிறுமியின் விபரீதச் செயல்!
தற்போது அந்த பெண், திருமணமாகி கர்ப்பமாக இருக்கும்நிலையில், வினோத் ஜோஸ்வா அந்த பெண்ணை வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். மீண்டும் அவர் அப்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண், கடம்பூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், வினோத் ஜோஸ்வாவை பிடித்து விசாரித்துள்ளனர்.
இந்த விசாரணையில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஜோஸ்வா ஒப்பு கொண்டதை அடுத்து அவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.