மொபைல் பயன்படுத்துவதைத் தடுத்த தாய்... பழி வாங்க திட்டம் போட்ட சிறுமியின் விபரீதச் செயல்!

குஜராத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி தனது தொலைபேசியை எடுத்துச் சென்றதால் தாயை பழிவாங்க, சமையல் அறையில் இருந்த சர்க்கரை டப்பாவில் பூச்சி மருந்தைக் கலந்து வைத்ததாகக் கூறப்படுகிறது.

Not allowed mobile phone, Gujarat teen plots to kill mother to take revenge

குஜராத்தில் உள்ள அகமதாபாத்தைச் சேர்ந்த 45 வயது பெண் ஒருவரை அவரது மகளே கொலை செய்ய திட்டம் போட்டது பற்றிய அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தப் பெண் தன் மகள் மொபைல் போன் பயன்படுத்துவதை தடுத்ததால், சிறுமி தாயை பழிவாங்க திட்டம் போட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமியின் தாய் பெண்களுக்கான 181 அவசர உதவி எண்ணை அழைத்து தன் மகளின் விபரீத நடவடிக்கை பற்றி கூறி ஆலோசனை பெற்றுள்ளார். சில நாட்களுக்கு முன்பு வெளியே சென்றபோது, அவர் தனது 13 வயது மகளின் மொபைல் போனை எடுத்துச் சென்றுவிட்டார்.  இது சிறுமியை தாய் மீது மிகவும் எரிச்சலடையச் செய்திருக்கிறது. அதன் பிறகு, சிறுமியின் நடத்தை மாறியுள்ளது. தனது பெற்றோரை பழி தீர்க்கும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்று முயன்றிருக்கிறார்.

ஒரே மொபைலில் பல அக்கவுண்ட்! வாட்ஸ்அப்பில் விரைவில் வருகிறது புதிய அப்டேட்

Not allowed mobile phone, Gujarat teen plots to kill mother to take revenge

சமையல் அறையில் சர்க்கரை டப்பாவில் பூச்சி மருந்தைக் கலந்து வைத்திருக்கிறார். குளியலறை தரையில் அடிக்கடி துப்புரவு திரவத்தைக் கொட்டி வைத்திருக்கிறார். இந்த விநோத செயல்களைக் கண்டுபிடித்ததாக தாய் மகளிர் உதவி எண் 181 க்கு போன் செய்து ஆலோசனை கோரியுள்ளார். உதவி மையத்தில் இருந்து பேசியவரிடம் சிறுமி பேசும்போது, தன் பெற்றோர் பூச்சி மருந்தை உட்கொள்ள வேண்டும் அல்லது குளியலறையில் வழுக்கி விழுந்து காயம் அடைய வேண்டும் என்று விரும்பியதாகக் கூறியிருக்கிறார்.

தங்கள் மகள் மொபைல் போனையே பார்த்துக்கொண்டு இருப்பதாவும், இரவில் நீண்ட நேரம் விழித்திருந்து சமூக ஊடகங்களில் ரீல்களைப் பார்ப்பது, நண்பர்களுடன் அரட்டை அடிப்பது என்று மூழ்கிக் கிடத்தாகவும் சிறுமியின் பெற்றோர் கூறியுள்ளனர். மொபைல் போனுக்கு அடிமை ஆனாதால் மகளுக்கு படிப்பில் நாட்டம் குறைந்துவிட்டது என்றும் மற்றவர்களுடன் நேரில் சகஜமாகப் பழகுவதே குறைந்துவிட்டது என்றும் சொல்கின்றனர்.

கல்லூரியில் சேரமுடியாமல் தவித்த ஏழை மாணவிக்கு உதவிக்கரம் நீட்டிய அமைச்சர்! சு.வெங்கடேசன் பாராட்டு!

Not allowed mobile phone, Gujarat teen plots to kill mother to take revenge

2022ஆம் ஆண்டில் இதேபோன்ற ஒரு வழக்கில், லக்னோவைச் சேர்ந்த 16 வயது சிறுவன், மொபைல் கேம்களை விளையாட விடாமல் தடுத்த தனது தாயைச் சுட்டுக் கொன்றான். லக்னோவின் பிஜிஐ பகுதியில் உள்ள அல்டிகோ காலனியில் இந்தச் சம்பவம் நடந்தது. கொலைக்குப் பிறகு, சிறுவன் தனது 10 வயது சகோதரியை ஒரு அறையில் பூட்டிவிட்டு, அடுத்த மூன்று நாட்களுக்கு தாயின் சடலத்துடன் அமர்ந்திருந்தான்.

தாயின் உடல் சிதைந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியதை அடுத்து, சிறுவன் பொய்க் கதையைப் புனைந்து பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளான். எனினும், போலீசார் அந்தச் சிறுவனிடம் இரண்டரை மணிநேர விசாரணைக்குப் பின் உண்மையைக் கண்டுபிடித்தனர்.

பிரான்சு யுனெஸ்கோ தலைமையகத்தில் சத்குரு நடத்தும் சிறப்பு யோகா தின நிகழ்ச்சி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios