கல்லூரியில் சேரமுடியாமல் தவித்த ஏழை மாணவிக்கு உதவிக்கரம் நீட்டிய அமைச்சர்! சு.வெங்கடேசன் பாராட்டு!
மாணவி நந்தினி கல்லூரிக்குச் சென்றிருப்பது குறித்து அறிந்த மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் உதவிக்கரம் நீட்டியவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள சாமநத்தம் கிராமத்தைச் சேர்ந்த மாணவி நந்தினி. இவரது பெற்றோர் வேல்முருகன் - பிரேமா. தந்தை வேல்முருகன் தனியார் அரிசி ஆலையில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிகிறார். இவரது மகள் நந்தினி அரசுப் பள்ளியில் வணிகவியல் பாடப்பிரிவில் 12ஆம் வகுப்பு படித்து முடித்திருக்கிறார். அண்மையில், வெளியான 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவின்படி, 600க்கு 546 மதிப்பெண் பெற்றுள்ள இவர் பள்ளியில் மூன்றாவது சிறந்த மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்.
கல்லூரியில் சேர விண்ணப்பிக்க வேண்டிய நேரத்தில் மாணவி நந்தினிக்கு அம்மை நோய் ஏற்பட்டுவிட்டது. இதனால், உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர் உரிய நேரத்தில் கல்லூரியில் சேர முடியவில்லை. குடும்பத்தில் வேறு யாரும் அதிகம் படித்தவர்களாக இல்லாத காரணத்தால் மாணவியை கல்லூரியில் சேர்க்க முயற்சி எடுக்காமல் இருந்துவிட்டனர்.
பிராமணர்களுக்கு புதிய கட்சி... பிராமணர்கள் மட்டும் வாக்களித்தால் போதும்: எஸ்.வி. சேகர் அறிவிப்பு
ஏழைக் குடும்பம் என்பதால் தனியார் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் அளவுக்கு பணவசதி இல்லை. இச்சூழலில் மாணவி நந்தினி மதுரை அரசு மீனாட்சி கல்லூரியில் சேர கடைசி நேரத்தில் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்துள்ளார். இருப்பினும் அவருக்கு சீட் கிடைப்பதில் சிக்கல் நிலவியது. அவர் அதிக மதிப்பெண் பெற்றிருந்ததால் பல அரசு அதிகாரிகளும், வெளிநாட்டினரும் அவருக்கு உதவ முன்வந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி, மதுரை மாவட்ட ஆசிரியர் சங்கீதா ஆகியோர் மாணவிக்கு மதுரை மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியில் இடம் வழங்க பரிந்துரை செய்தனர். அதன்படி, அந்தக் கல்லூரியில் பி.காம் பாடப்பிரிவில் மாணவி நந்தினிக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், அவர் இப்போது கல்லூரியில் சேர்ந்திருக்கிறார்.
பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம்.. இந்தியாவும் இந்த ஆய்வுப் பணியில் சேர வேண்டும் என நாசா விருப்பம்..
மாணவி நந்தினி கல்லூரிக்குச் சென்றிருப்பது குறித்து அறிந்த மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் உதவிக்கரம் நீட்டியவர்களுக்கு நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். "மதுரை மாணவி நந்தினி அருள்மிகு மீனாட்சி அரசுக் கல்லூரியில் BCom பாடப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். தலையிட்ட, கவனப்படுத்திய, உதவ முன்வந்த அனைவருக்கும் நன்றி" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரான்சு யுனெஸ்கோ தலைமையகத்தில் சத்குரு தலைமையில் யோகா தின நிகழ்ச்சி!