என்னோட நீ பேசலன்னா! நாம உல்லாசமாக இருந்த வீடியோவை வெளியிட்டு விடுவேன்! மிரட்டிய காதலன்! இறுதியில் நடந்த பகீர்
திருப்பூர் மாவட்டம் பூலுவப்பட்டி அம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் ஷாஜகான் (26). இவர், திருப்பூரில் ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருந்தபோது எடுத்த ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பூலுவப்பட்டி அம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் ஷாஜகான் (26). இவர், திருப்பூரில் ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், அதே நிறுவனத்தில் பணியாற்றி வந்த இளம்பெண்ணை ஷாஜகான் காதலித்து வந்துள்ளார். இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர்.
இதையும் படிங்க;- தாலி கட்டிய மனைவி செய்யுற வேலையா இது.. உல்லாசத்துக்காக கள்ளக்காதலனுடன் சேர்ந்து என்ன செய்தார் தெரியுமா?
இந்நிலையில், இவர்களுக்கு காதலுக்கு பெண்ணின் வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அந்த பெண்ணுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளையை பார்த்து திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர். இதனையடுத்து, அந்த பெண் ஷாஜனானுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். பலமுறை காதலியை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட போதும் அவர் எடுக்கவில்லை.
இதையும் படிங்க;- 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்! 7 பேர் பலி!100 பேர் மருத்துவமனையில் அனுமதி! விபத்து நடந்தது எப்படி?
இதனால், ஆத்திரமடைந்த ஷாஜகான், காதலியை வேறு எண்ணில் தொடர்பு கொண்டு இருவரும் உல்லாசமாக இருந்த ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் இதுகுறித்து திருப்பூர் வடக்கு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி ஷாஜகானை கைது செய்தனர்.