மனைவியை நாயுடன் உறவு கொள்ள வற்புறுத்திய கணவனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 
கர்நாடகா மாநிலம், பெலகவி மாவட்டத்தை சேர்ந்தவர் பிரீத்தம். இவர் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் கவிதா என்கிற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ப்ரீத்தம்- கவிதா தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கடந்த மாதம் ப்ரீதமிற்குள் இருந்த காம மிருகம் வெளிபட்டிருக்கிறது. அதாவது அன்றைய தினம் நாயுடன் உடலுறவு கொள்ளச் சொல்லி மனைவி கவிதாவை வற்புறுத்தி உள்ளான். ஆமாம். பிரீத்தம் ஒரு செக்ஸ் கொடூரன், மொபைலில் அதிகமாக செக்ஸ் படங்களை பார்த்து அதன்படி மனைவியை நடந்துகொள்ளச் சொல்லி சித்ரவதை செய்து வந்துள்ளான்.

திருமணம் முடிந்து சில ஆண்டுகள் மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்த பிரீத்தம், தொடர்ந்து செக்ஸ் படங்களை பார்த்ததால் வக்கிடத்துடன் நடந்து கொள்ள ஆரம்பித்து இருக்கிறான். செக்ஸ் படங்களை பார்த்து மனைவிக்கு டார்ச்சர் கொடுத்தவன், அதன் உச்சகட்டமாக தனது மாமனார் வீட்டில் இருந்து தூக்கி வரப்பட்ட நாயை கவிதா முன் நிறுத்தி அதோடு உறவுகொள்ளச் சொல்லி மிரட்டியிருக்கிறான். இதற்கு கவிதா மறுப்பு தெரிவித்ததால் அவரையும் குழந்தைகளையும் வீட்டை விட்டு அடித்து துரத்தி இருக்கிறார்.  இதுதொடர்பாக கவிதா காவல்துறையில் அளித்த புகாரின் பேரில், கடந்த மார்ச் 25-ஆம் தேதி பிரீத்தம் கைது செய்யப்பட்டான். 

இந்த வழக்கு விசாரணை கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகவி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது. இறுதிக் கட்ட விசாரணையில்  பிரீத்தம் குற்றவாளி என்பது உறுதி செய்யப்பட்டதால் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.11,500 அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.