சைக்கிள் செயினால் கழுத்தை நெரித்து.. 12 சிறுவனை கொடூரமாக கொன்ற 3 சிறார்கள்..
மத்திய பிரதேசத்தில் 12 வயது சிறுவன், 3 சிறுவர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்தியப் பிரதேசம் மாநிலம் சியோனி மாவட்டத்தில் 12 வயது சிறுவன் ஒருவனை, மூன்று நண்பர்கள் சைக்கிள் சங்கிலியால் கழுத்தை நெரித்து கொன்றதாக கூறப்படுகிறது. மேலும் உயிரிழந்த சிறுவனின் தலையை கல்லால் அடித்து, கத்தியால் கழுத்தை அறுத்துள்ளனர். சியோனிக்கு அருகிலுள்ள மகர்கதா கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த கொடூர கொலை நடந்துள்ளது.
மூன்று சிறுவர்களும் 12 வயது சிறுவனின் உடலை ஒரு பாலித்தீன் பையில் அடைத்து தங்கள் வீட்டின் அருகே உள்ள கூழாங்கற்களின் குவியல் மீது வீசியுள்ளனர். ஒரு பெண் இரத்தக் கறை படிந்த பையை கண்டுபிடித்தபோது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
இதையும் படிங்க : வீட்டில் தனியாக இருந்த ஆண்டியை வாயை பொத்தி கூட்டு பலாத்காரம் செய்ய முயற்சி.. இறுதியில் என்ன நடந்த ட்விஸ்ட்.!
காவல்துறை அதிகாரி ஷஷிகாந்த் சரேயம் இதுகுறித்து பேசிய போது “ இந்த கொலையை செய்த 3 சிறார்களில் ஒருவரான 16 வயது சிறுவன, 12 வயது சிறுவனின் சகோதரியுடன் பேச முயன்றுள்ளார். அந்த 12 வயது சிறுவவனுக்கு இது தெரிந்ததும், அவருக்கும் குற்றவாளிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதுவே இந்த கொடூர கொலைக்கான தூண்டுதலாக அமைந்தது.” என்று கூறினார்.
காவல் நிலைய ஆய்வாளர் பிரசன்னா சர்மா இதுகுறித்து பேசிய போது “ கொலை செய்த 3 சிறார்களும், 12 வயது சிறுவனை சியோனி மாவட்டத் தலைமையகத்திலிருந்து 28 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மகர்கதா கிராமத்தில் உள்ள வெறிச்சோடிய இடத்திற்கு ஞாயிற்றுக்கிழமை வரவழைத்தனர். இந்த மூவரும் சிறார்களாக இருந்தபோதிலும், பழக்கப்பட்ட கொலையாளிகள் போல் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த கொலைக்கான திட்டத்தை தீட்டிய அவர்கள் மூவரும் தங்கள் 12 வயது நண்பரை ஒதுக்குப்புறமான இடத்திற்கு வரவழைத்தனர். அவர்கள் அவரை பிடித்து சைக்கிள் சங்கிலியால் கழுத்தை நெரித்தனர். சிறுவன் வலியால் துடித்தபோது, அவரது தலையை பெரிய கல்லால் அடித்து, ஆடுகளை வெட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் கூர்மையான கத்தியால் கழுத்தை வெட்டி உள்ளனர். மூன்று சிறுவர்களும் உடலை பாலித்தீன் பையில் திணித்து, தங்கள் வீட்டின் அருகே உள்ள கூழாங்கற்களின் குவியல் மீது தூக்கி எறிந்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்..” என்று தெரிவித்தார்.
மூன்று சிறார்களும் கைது செய்யப்பட்டுநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர், அவர்கள் 14 நாட்களுக்கு சீர்திருத்த இல்லத்திற்கு அனுப்பப்பட்டனர் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க : பட்டாக்கத்தியுடன் ரயில் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த கல்லூரி மாணவர்கள்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்.!