பட்டாக்கத்தியுடன் ரயில் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த கல்லூரி மாணவர்கள்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்.!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த மாணவர்கள், தினமும் பேருந்து, ரயில்களில் கல்லூரிக்கு வருகின்றனர். இவ்வாறு வருகின்றபோது தாங்கள் படிக்கும் கல்லூரிதான் கெத்து என்பதை மற்றவர்களுக்கு காட்ட வேண்டும் என்பதால் தேவையில்லாத ரகளை மற்றும் பிரச்னையில் மாணவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

chennai pachaiyappas college student arrested

சென்னை பட்டாபிராமில் பட்டாக்கத்தியுடன் ரயில் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த மாணவர்கள், தினமும் பேருந்து, ரயில்களில் கல்லூரிக்கு வருகின்றனர். இவ்வாறு வருகின்றபோது தாங்கள் படிக்கும் கல்லூரிதான் கெத்து என்பதை மற்றவர்களுக்கு காட்ட வேண்டும் என்பதால் தேவையில்லாத ரகளை மற்றும் பிரச்னையில் மாணவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அவ்வப்போது இதுதொடர்பான வீடியோ வைரலாகி போலீசார் கைது நடவடிக்கை எடுத்தாலும் மாணவர்களின் அட்டகாசம் குறையவில்லை. 

chennai pachaiyappas college student arrested

இந்நிலையில், நேற்று அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் மின்சார ரயிலில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ஹால்டிக்கெட் வாங்க ரயிலில் பயணம் செய்துள்ளனர். அப்போது, மின்சார ரயில் அரக்கோணத்தில் இருந்து இந்து கல்லூரி அருகே வந்து நிற்கும் போது மாணவர்கள் பாட்டு பாடிக்கொண்டே ஆபத்தான முறையில் பயணம் செய்துள்ளனர். அப்போது நாங்கலாம் பச்சையப்பன் காலேஜ்..எங்ககிட்ட வம்பு வச்சுக்காதீங்க என கோஷம் எழுப்பியவாறு சென்றனர். 

chennai pachaiyappas college student arrested

அதில், ஒரு மாணவன்  படிகட்டில் தொங்கிய படி பட்டாக்கத்தியை நடைமேடையில் தேய்த்த படி சென்றது தொடர்பான வீடியோ வைரலானது. இதனை கண்டு நடைமேடையில் இருந்த பயணிகள் அலறியடித்துக்கொண்டு விலகி சென்றனர். இதுதொடர்பாக ஆவடி ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடியோ ஆதாரத்தை கொண்டு கல்லூரி மாணவர்களானசரண்ராஜ் மற்றும் அபினேஷ் ஆகியோரை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios