எட்டாம் வகுப்பு படிக்கும் 15 வயது பள்ளி மாணவனுடன் 28 வயது எதிர் வீட்டு பெண் தலைமறைவாகியுள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இருவரும் திருமணத்துக்கு புறம்பான உறவில் ஈடுபட்டு வந்த நிலையில் ஊரை விட்டு சென்று இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
எட்டாம் வகுப்பு படிக்கும் 15 வயது பள்ளி மாணவனுடன் 28 வயது எதிர் வீட்டு பெண் தலைமறைவாகியுள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இருவரும் திருமணத்துக்கு புறம்பான உறவில் ஈடுபட்டு வந்த நிலையில் ஊரை விட்டு சென்று இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
பெரும்பாலான கொலை, தற்கொலைகள், இன்ன பிற குற்றங்களுக்கு கள்ளக்காதல் மூல காரணமாக இருந்து வருகிறது. ஒரு சிலர் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைந்தாலும் உடலுறவுக்காக மூன்றாவது நபரை தேடி கள்ளக்காதலில் சிக்கிக் கொள்கின்றனர். இது போன்ற உறவுகள் வயது வித்தியாசமின்றி நடந்து வருகிறது, இந்த வரிசையில் திருமணமாகி கணவருடன் வசித்து வந்த பெண் 15 வயது இளைஞனுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு தலைமறைவாகியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. தன்னுடன் இரண்டு குழந்தைகளையும் அந்தப் பெண் அழைத்துச் சென்றுள்ளதால் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: 53 வயது வெளிநாட்டுப் பெண்மீது ஆசை.. தனியாக வீடு எடுத்து பலமுறை உல்லாசம்.. வெறி தீர்ந்ததும் அவன் செய்த காரியம்
முழு விவரம் பின்வருமாறு:- ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் குடிவாடா நகரில் குட்மென் பேட்டையை சேர்ந்தவர் ஷப்னா (28) இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார், இந்நிலையில் எதிர் வீட்டில் இருக்கும் எட்டாம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவன் சானு ஷப்னா நெருங்கி பழகி வந்ததாக தெரிகிறது. ஷப்னாவுக்கும் சானுவுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது, இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி சானுவை அழைத்துக் கொண்டு தனது 2 குழந்தைகளுடன் ஷப்னா வீட்டை விட்டு வெளியேறினார்.
இதையும் படியுங்கள்: ஏற்காட்டில் அதிகரிக்கும் விபச்சாரம்..சுற்றுலா பயணிகள் ஷாக் !
முதலில் ஷப்னா எங்கோ போய் இறந்துவிட்டதாக குடும்பத்தினர் எண்ணினர், ஆனால் எதிர்வீட்டு மாணவன் சானு இல்லாததால் இருவரும் ஒன்றாக ஊரைவிட்டு சென்றிருக்க கூடும் என தகவல் பரவியது, ஒருவேளை பணத்துக்காக மாணவன் கடத்தப்பட்டிருந்தாலும், கடத்தியவர்கள் தொலைபேசி வாயிலாக பணம் கேட்டு மிரட்டி இருக்கக்கூடும், ஆனால் அதுபோன்ற அழைப்புகள் எதுவும் வரவில்லை, ஷப்னா சானு இடையே தொடர்பு இருந்ததா? என்பது குறித்தும் போலீசார் விசாரித்தனர், முதற்கட்ட விசாரணையில் மாணவன் சானுவும் சாப்னாவும் சேர்ந்து மாயமானது தெரிய வந்துள்ளது.

ஆனால் இன்று வரையும் அவர்களிடமிருந்து எந்தவிதமான தொலைபேசி அழைப்பும் இல்லை, இந்நிலையில் மாணவனின் பெற்றோர் ஒரு பக்கம் வலைவீசி தேடி வருகின்றனர். இருவரது போன் கால் மற்றும் மோபைல் போன் சிக்னல் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, ஏற்கனவே மாணவன் சானு ஷப்னா இருவரும் நெருக்கமாக உள்ள புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் பரவி வருகிறது. இந்நிலையில் 15 வயது மாணவனை 28 வயது பெண் அழைத்துச் சென்றுவிட்டார் என்ற செய்தியை மாவட்டம் முழுவதும் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர், விரைவில் உண்மை என்ன என்று தெரியவரும் என போலீசார் கூறியுள்ளனர்.
