திருவண்ணாமலையில் 13 வயது சிறுமியை 60 வயது முதியவர் ஒருவர் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அந்த முதியவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். 

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம், அனக்காவூா் கிராமத்தைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளியின் 13 வயது மகள் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த மாணவியின் தாய் ஒரு கோயிலில் துப்புரவுப் பணி செய்து வருகிறார். தாய்க்கு உதவியதாக அந்த மாணவி உடன் சென்று வந்தார். அந்தக் கோயில் நிர்வாகக் குழு உறுப்பினராக இருந்து வருபவா் நடராஜன் (63). கூட்டுறவு கடன் சங்கத்தில் செயலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். 

இதையும் படிங்க;- அதிரடி திருப்பம்... மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த மாரிதாஸ்..!.

இவரது வீடு அந்த மாணவி படிக்கும் பள்ளி அருகே உள்ளதாக கூறப்படுகிறது. அதனால் அந்த மாணவி நடராஜன் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அதன் காரணமாக அவ்வப்போது மாணவிக்கு தேவையான பொருட்களை நடராஜன் வாங்கிக் கொடுத்து வந்துள்ளார். இதனையே தனக்கு சாதகமாக்கிக்கொண்ட முதியவர் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். ருசி கண்ட பூனை சும்மா இருக்கோமோ வாய்ப்பு கிடைக்கும் போதேல்லாம் பலமுறை பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

 

இதையும் படிங்க;- சென்னையில் டியூசன் சென்டரில் பிரத்யேக படுக்கை அறை... மாணவிகளை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்த சஞ்சனா டீச்சர்..!.

இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாணவிக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவரை தனியார் மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றனர். அப்போது, அந்த மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி 9 மாத கா்ப்பமாக இருப்பதாக கூறியதையடுத்து பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக போலீசார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் நடராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.