சென்னை தி.நகரில் டியூசன் சென்டரில் படிக்க வந்த மாணவ, மாணவிகளை மிரட்டி ஒன்றாக இருக்கவைத்து வீடியோ எடுத்து சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக டீச்சர் மற்றும் அவரது ஆண் நண்பரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். 

சென்னை தி நகரில் இயங்கி வருகிறது காஞ்சனா டியூஷன் சென்டர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இங்கு பத்தாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவிகள் டியூஷன் பயின்று வருகிறார்கள். இவரிடம் டியூஷன் படிக்கும் மாணவி ஒருவர் சோர்வடைந்து, ஆடைகள் கலைந்த நிலையில் நேற்று வீட்டிற்கு வந்துள்ளார். இதைபார்த்த பெற்றோர் அலறிய படி விசாரித்தனர். அப்போது, டியூசன் சொல்லிக்கொடுக்கும் சஞ்சனா டீச்சர் மற்றும் அவரது ஆண் நண்பர் பாலாஜி (38) ஆகியோர் தன்னை மிரட்டி உடன் படிக்கும் சக மாணவனுடன் படுக்கை அறையில் ஒன்றாக இருக்க வைத்து படமும், வீடியோவும் எடுத்ததாக தெரிவித்தார்.

இதையும் படிங்க;- 9 வகுப்பு மாணவியை லாட்ஜில் வைத்து இரவு முழுவதும் ஆசை தீர பலாத்காரம்... காலையில் வீட்டு வாசலில் ட்ராப் செய்து எஸ்கேப்பான காமக்கொடூரன்கள்..!

இதை சற்றும் எதிர்பாராத பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக  மாம்பலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 
அதன்படி போலீசார் டீச்சர் சஞ்சனா மற்றும் அவரது ஆண் நண்பர் பாலாஜியை பிடித்து நேற்று விசாரணை நடத்தினர். அப்போது, டியூசன் சென்டரில் படுக்கை அறை ஒன்றை இதற்காகவே அமைத்துள்ளார். அழகான மாணவ, மாணவிகளை தேர்வு செய்து அவர்களை ஒன்றாக சேர்த்து படுக்கை அறையில் நிர்வாணமாக நிற்க வைத்து பலகோணங்களில் புகைப்படங்கள் எடுத்தும், இருவரையும் ஒன்றாக இருப்பது போல் வீடியோவும் எடுத்தும் விசாரணையில் தெரியவந்தது.

மேலும், பாலாஜி அந்த வீடியோவை காட்டி மாணவிகளை மிரட்டி தன்னுடன் உல்லாசமாக இருக்கவும் மற்றும் பணம் பறிப்பதுமாக இருந்து வந்துள்ளார். இருவரிடம் உள்ள செல்போன்களை பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர். அதில், 10க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளின் நிர்வாண படங்கள் மற்றும் ஆபாச வீடியோ  இருந்தது தெரியவந்தது. இதை கைப்பற்றிய போலீசார் இருவரையும் போக்சோ சட்டத்தில் கைது சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் சென்னையில் டியூசனுக்கு அனுப்பும் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.