11 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.. சென்னை இளைஞருக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு என்ன தெரியுமா?

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமி தனது பாட்டியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், 2021ம் ஆண்டு பாட்டிக்கு அறிமுகமான வாலிபர் வீட்டில் இருந்த சிறுமியை மிரட்டி, பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் சிறுமி கர்ப்பமாகி அவருக்கு குறை பிரசவத்தில் குழந்தை பிறந்து இறந்தது.

11-year-old girl rape case.. Chennai youth sentenced to life imprisonment tvk

சென்னை வண்ணாரப்பேட்டையில் 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் ராஜா(35) என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு  தீர்ப்பு வழங்கியுள்ளது.

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமி தனது பாட்டியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், 2021ம் ஆண்டு பாட்டிக்கு அறிமுகமான வாலிபர் வீட்டில் இருந்த சிறுமியை மிரட்டி, பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் சிறுமி கர்ப்பமாகி அவருக்கு குறை பிரசவத்தில் குழந்தை பிறந்து இறந்தது.

இதையும் படிங்க;- சுடுகாட்டில் முனகல் சத்தம்! கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசமாக இருந்த போது தீ வைத்த கணவர்!இறுதியில் நடந்தது என்ன?

11-year-old girl rape case.. Chennai youth sentenced to life imprisonment tvk

இதுகுறித்து சிறுமியின் தாய் வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்தனர். மேலும் குற்றத்தை மறைத்தற்காக சிறுமியின் தாய், அவரது தோழி, அவரது தாயாரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். 

இதையும் படிங்க;-  உல்லாசத்தின் ஓயாமல் அழுத குழந்தை.. கடுப்பான கள்ளக்காதலன்.. வாயில் மதுவை ஊற்றி கொடூர கொலை.! சிக்கிய காம தாய்!

11-year-old girl rape case.. Chennai youth sentenced to life imprisonment tvk

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை நீதிபதி எம். ராஜலட்சுமி முன்பு விசாரணை நடைபெற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், சிறுமியின் தாய், அவரது தோழி, ராஜாவின் தாய் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத காரணத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.  ராஜா மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு சாகும் வரை சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராத தொகையை, பாதிக்கப்பட்ட மாணவிக்கு வழங்குவதோடு தமிழக அரசு இழப்பீடாக 15 லட்சம் ரூபாயும் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios