செக்ஸ் டார்ஸன் என்றால், பாலியல் இணையதளங்களைப் பார்க்கும் செயலுக்கு அடிமையானவர்களை அவர்களுக்கே தெரியாமல் அவர்களின் தனிப்பட்ட விவரங்கள், அந்தரங்க புகைப்படங்கள், வீடியோ ஆகியவற்றை திருடி மிரட்டி பணம் பறிக்கும் செயலாகும். செக்ஸ் டார்ஸன் எனப்படும் இத்தகைய வழக்குகள் அதிகரித்து வருவதாக அமெரிக்க சட்ட அமலாக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பான ஆய்வு ஒன்றை ப்ரூக் கிங்ஸ் இன்ஸ்டிடியூட் நிறுவனம் நடத்தி அதன் முடிவுகளை அண்மையில் வெளியிட்டிருந்தது.

இந்த குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் இளம் வயது கொண்டோர்களே அதிகம். இத்தகைய குற்றங்களை நிகழ்த்தும் குற்றவாளிகளில் பெரும்பாலோர் ஆண்களாக இருக்கின்றனர். வயது வந்தோர்களில் அதிகமான பெண்களும் உள்ளனர். இத்தகைய தாக்குதல்களுக்கு ஆளானவர்கள், அவமானம் கருதி அமைதியாக இருந்து விடுகின்றனர்.

இந்த நிலையில், மும்பை சைபர் கிரைம் போலீசாரிடம் 5 பேர், செக்ஸ் டார்சன் குறித்து புகார் அளித்துள்ளனர். பாலியல் இணையதளங்களை பார்த்துப் பழகிய 5 பேரின் தனிப்பட்ட விவரங்களைத் திருடி பணம் கேட்டு மிரட்டுவதாக கூறி அவர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

இது தொடர்பாக மும்பை போலீஸ் அதிகாரிகள் கூறும்போது: செக்ஸ்டார்ஸன் என்பது பாலியல் இணையதளங்களைப் பார்ப்பவர்களை குறிவைத்துத் தாக்கப்படும் முறையாகும். பாலியல் இணையதளங்கள் பார்ப்பவர்களிடம் சாட்டிங்கில் ஈடுபட்டு அவர்களிடம் இருந்து புகைப்படங்கள், தனிப்பட்ட விவரங்களைக் கேட்டு மிரட்டலில் ஈடுபடும் செயலாகும். 

சில நேரங்களில் பாலியல் இணையதளங்களில் சில லிங்க்குகளை இணைத்து அதன் மூலம் பாலியல் இணையதளங்கள் பார்ப்பவர்களின் தனிப்பட்ட விவரங்கள், புகைப்படங்கள் திருடப்படுவதுண்டு. அப்போது விவரங்கள் ஏதும் கிடைத்துவிட்டால் பாலியல் இணையதளத்துக்கு அடிமையாளர்களிடம் பணத்தைக் கேட்டு மிரட்டலாம் அல்லது பாலியல் இச்சைக்குப் பயன்படுத்தலாம். 

அந்த வகையில் 2 பெண்கள், 3 ஆண்கள் இந்த விஷயத்தில் சிக்கியுள்ளனர். 

தற்போது இவர்களிடம் பணம் கேட்டு இணையதளம் வாயிலாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பணத்தை "பிட்காயின்களாக" தர வேண்டும் என்றும் இல்லாவிட்டால் தனிப்பட்ட தகவல்களை கேட்டு மிரட்டுவதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. மேலும், அந்தரங்க புகைப்படங்களை இணையதளத்தில் பரப்பி விடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.

 புகார் கூறிய 5 பேரும், பாலியல் இணையதளங்களைப் பார்க்கும்போது, சில லிங்க்குகளை கிளிக் செய்துள்ளனர். அதன்பின், சில நாட்களில் அவர்களுக்கு மின்னஞ்சல் வந்துள்ளது. 

அதில் அவர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. 

பாலியல் இணையதளங்களைப் பார்ப்பவர்கள் பலரின் தனிப்பட்ட விவரங்கள் இதில் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் வெளியே சொல்ல முடியாமல் உள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் மட்டுமே தொடர்ந்து வந்த புது வகையான சைபர் க்ரைம் இப்போது இந்தியாவிலும் வந்துவிட்டது என்று மும்பை போலீஸ் அதிகாரிகள் கூறுகின்றனர்.

பாலியல் இணையதளங்களைப் பார்ப்பவர்களின் விவரங்கள் எவ்வாறு திருடப்படுகின்றன. எவ்வாறு ஹேக் செய்யப்படுகிறது என்பது பற்றி சைபர்கிரைம் போலீசார் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட 5 பேரும் போலீசாரிடம் அதிகாரப்பூர்வமாக புகார் அளிக்காத காரணத்தால், விசாரணை குறித்து கூற போலீசார் மறுத்துள்ளனர். மேலும் இது தொடர்பான விரிவான விசாரணையும் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர்கள் கூறினர்.