ஜெய் பிரகாஷ், டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ள காட்மேன் வெப் சீரிஸின் டீசர் கடந்த வாரம் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. இயக்குநர் பாபு யோகேஸ்வரன் இயக்கிய இந்த வெப் தொடரை ஜீ5 தனது ஆன்லைன் தளத்தில் ஜூன் 12ம் தேதி ஒளிபரப்பவிருந்தது.பிராமண சமூகத்தினர் குறித்து சர்ச்சை வசனங்கள், உச்சகட்ட ஆபாச காட்சிகள், இந்து கடவுள்கள் மீதான நம்பிக்கையை அவமதிப்பது போன்ற காட்சிகள் டீசரில் இடம் பெற்றிருந்ததால் சர்ச்சை வெடித்தது. 

இதையும் படிங்க: டாப் ஆங்கிளில் அதிர்ச்சி கொடுத்த சாக்‌ஷி... புடவையில் ஒட்டுமொத்த அழகையும் காட்டி அட்ராசிட்டி...!

அந்தணரை அவமதித்ததாகவும், இந்து மக்களின் மத நம்பிக்கையை புண்படுத்திவிட்டதாகவும் “காட்மேன்” தொடர் இயக்குநர், ஜீ5 நிர்வாகம் உள்ளிட்டோர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் இந்து மற்றும் பிராமண அமைப்பினர் சார்பில் புகார்கள் அளிக்கப்பட்டன. பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ள இந்த வெப் தொடரை தடை செய்ய வேண்டுமென ஜீ5 நிர்வாகத்திடமும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இதை தொடர்ந்து, அந்த தனியார் தொலைக்காட்சியின் ஓடிடி தளத்தில் இருந்து, 'காட்மேன்' டீசர் அதிரடியாக நீக்கப்பட்டது. 

இதற்கிடையே சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் இந்து முன்னணியினர் புகார் அளித்தனர். இந்த வழக்கை ஏற்றுக்கொண்ட போலீசார்,“காட்மேன்” தொடரின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மீது வழக்கு பதிவு செய்தனர். அதே போல் இந்த 'காட்மேன்' வெப் தொடரில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள, நடிகர் டேனியல் பாலாஜி, ஜெய பிரகாஷ், மற்றும் சோனியா அகர்வால் ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அடுத்தடுத்து சர்ச்சையை கிளப்பிய இந்த தொடரை வெளியிடப்போவதில்லை என்று ஜீ நிறுவனம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: “ட்வீட்டை ஒழுங்கா பாத்தியாடா?”.... ஒருமையில் திட்டிய சூர்யா ரசிகரை தனது பாணியிலேயே டீல் செய்த சரத்குமார்...!

டிஜிட்டல் தளத்தில் பொறுப்பான முன்னணி தளமாக ஜீ குழுமம் செயல்பட்டு வருவதாகவும், பார்வையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு சுய தணிக்கைகளில் கடுமையான வழிமுறைகளை பின்பற்றி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சமீபத்தில் தமிழ் வெப் தொடரான “காட்மேன்” தொடர்பாக வந்த கருத்துக்களின் அடிப்படையில் அதை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளோம். இந்த தொடருக்கோ, தயாரிப்பாளர்களுக்கோ, ஜீ குழுமத்திற்கோ எந்த ஒரு மதத்தின் நம்பிக்கையையோ, சமூகத்தையோ, தனி நபரின் நம்பிக்கையையோ காயப்படுத்தும் எண்ணமில்லை. பார்வையாளர்களின் பொழுபோக்கிற்காக மட்டுமே பல மொழிகளில் 100க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை ஜீ குமுமம் வழங்கி வருகிறது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.